நெருப்பின் விரல்பிடித்து
எழத்துடிக்கிறேன்
அனலின் கதகதப்பில்
பறக்க முயல்கிறேன்
ஆதவனின் தீக்கரம்பற்றி
மிதக்கப்பார்க்கிறேன்
கனலதன் இறக்கைப்பற்றி
விடுதலை வேண்டுகிறேன்
வெந்து சாம்பலாகும்
இயற்கையின் நடுவே
அதை எய்தவிரும்புகிறேன்
'
இங்கே சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்
'
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்
'
நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழகாய்
அனல்தனில் உறைகிறேன்!
20 கருத்துகள்:
'நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழாகாய்
அனல்தனில் உறைகிறேன்!
நைஸ் ending. ஆமா, என்ன ஆச்சு? காலங்காத்தால, திருப்பாச்சி அருவால தூக்கிகிட்டு வாடா வாடா சாங் கேட்டு சிங்கம் எந்திரிச்சிடுச்சா?
கவிதை அனல் பறக்குது!!!!
அனல் பறக்கும் கவிதை,
அர்த்தம் அறிந்துக்கொள்ள கடினமாக உள்ளது:-)
\\'நான் மெதுவாய்அனல்தனில் உறைகிறேன்,இன்னும் அழகாய்அனல்தனில் உறைகிறேன்!\\
அற்புதம்:-)
கவிதை ரொம்ப 'சூடா' இருக்குது சதீஷ்!!
\\ஆதவனின் தீக்கரம்பற்றிமிதக்கப்பார்க்கிறேன்\\
தீ கரம் எல்லாம் ஏன் பிடிக்கிறீங்க?? கை சுட்டுக்க போகுது!
\\சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்\\
உண்மைகள் கிடைக்க வாழ்த்துகிறேன்!
\\'நான் மெதுவாய்அனல்தனில் உறைகிறேன்,இன்னும் அழகாய்அனல்தனில் உறைகிறேன்!\\
நச்சென்ற வரிகள்!! சூப்பர்!!
nice kavidhai! வெயில் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு :)
நீங்க என்ன சொல்லவரிங்கனு புரியல
ஆனா ரொம்ப சூடான கவிதை சதீஷ்
// நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழகாய்
அனல்தனில் உறைகிறேன்!//
இந்த கடைசி வரிகள் அர்ப்புதம்
// வெயில் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு :)//
ஆமா சதீஷ் கொஞ்சம் ஜாஸ்திதான்
ரொம்ப சுடுது :P
எல்லாம் மக்கள்ஸும் என்னை மாதிரியே கமெண்ட் போட்டு இருக்காங்க போல ;)
// சத்யா said...
'நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழாகாய்
அனல்தனில் உறைகிறேன்!
நைஸ் ending. ஆமா, என்ன ஆச்சு? காலங்காத்தால, திருப்பாச்சி அருவால தூக்கிகிட்டு வாடா வாடா சாங் கேட்டு சிங்கம் எந்திரிச்சிடுச்சா?
//
வருக வருக!! சத்யா அவர்களை இருகரம் கூப்பி வரவேற்கிறேன் _/\_
கரக்டா சொன்னீங்க அண்ணாச்சி!!
//சத்யா said...
கவிதை அனல் பறக்குது!!!!
//
அப்டீங்களா?? அனல் சுட்டுருச்சா :)) நன்றி சத்யா!
//Praveena Jennifer Jacob said...
அனல் பறக்கும் கவிதை,
அர்த்தம் அறிந்துக்கொள்ள கடினமாக உள்ளது:-)
\\'நான் மெதுவாய்அனல்தனில் உறைகிறேன்,இன்னும் அழகாய்அனல்தனில் உறைகிறேன்!\\
அற்புதம்:-)
//
அர்த்தம் பெரிதாய் ஒன்றும் இல்லை இப்ரவீனா! தோன்றியதை கிறுக்கிவைத்தேன் அவ்வளவே :) வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!
//Divya said...
கவிதை ரொம்ப 'சூடா' இருக்குது சதீஷ்!!
\\ஆதவனின் தீக்கரம்பற்றிமிதக்கப்பார்க்கிறேன்\\
தீ கரம் எல்லாம் ஏன் பிடிக்கிறீங்க?? கை சுட்டுக்க போகுது!
//
அதெல்லாம் நல்ல gloves வாங்கி போட்டுகிட்டா சுடாதுல்ல :))
//Divya said...
\\சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்\\
உண்மைகள் கிடைக்க வாழ்த்துகிறேன்!
\\'நான் மெதுவாய்அனல்தனில் உறைகிறேன்,இன்னும் அழகாய்அனல்தனில் உறைகிறேன்!\\
நச்சென்ற வரிகள்!! சூப்பர்!!
//
உண்மைகள் கிடத்துவிட்டால் பின் எழுத்துக்களுக்கு என்ன வேலை! உங்களின் வாழ்த்துக்கள் நிறைவேறட்டும் :)
நன்றி திவ்யா!
//Dreamzz said...
nice kavidhai! வெயில் கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கு :)
//
குடை வச்சிருக்கீங்களா Dreamzz:)) பாராட்டுக்கு நன்றி!
//கார்த்திக் said...
நீங்க என்ன சொல்லவரிங்கனு புரியல
ஆனா ரொம்ப சூடான கவிதை சதீஷ்
// நான் மெதுவாய்
அனல்தனில் உறைகிறேன்,
இன்னும் அழகாய்
அனல்தனில் உறைகிறேன்!//
இந்த கடைசி வரிகள் அர்ப்புதம்
//
வரிகளை இரசித்தமைக்கு மிக்க நன்றி கார்த்திக்!
//துர்கா said...
ரொம்ப சுடுது :P
//
வாங்க துர்கா!! தங்களின் முதல் வருகையால் மிகவும் மகிழ்ந்தேன்!
ஒஹ் ரொம்ப சுடுதா!! பாத்துங்க monitor வெடிச்சுட போது :)
//துர்கா said...
எல்லாம் மக்கள்ஸும் என்னை மாதிரியே கமெண்ட் போட்டு இருக்காங்க போல ;)
//
அட கண்டுபுடிச்சிடீங்களே :)))
உண்மையின் அனல் அழகாய்...
தினேஷ்
//இங்கே சுடர்வைத்து
எனைக்கொளுத்தி
இருளில் ஒளிந்த
உண்மைகள் தேடுகிறேன்//
:))) Nice one
கருத்துரையிடுக