அவளாய்
சிலநிமிடங்களில் சேயாய்
பலதருணங்களில் தாயாய்
அன்னையாய் தோழி,
பலகணங்களில் சேயாய்
சிலகாலங்களில் தாயாய்
அன்பாய் காதலி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஓவியம்

இதழ்களால் உச்சரித்து
கண்களால் வழிகாட்டி
விரல்களால் பேனாவை இயக்கி
ஓர் ஓவியம் கவிதை வரைவதை
தரிசித்தேன் - அவள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவிதை...

கவிதை இயற்ற எத்தனித்தேன்
அவனுக்கு ஈடாய்,
ஆனால் என்செய்வேன் தோற்றுப்போனேன்...
உனை போன்ற அழகிய கவிதை வடிக்க
அவனால் மட்டுமே முடியும் - இறைவன்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோபம்...

பூப்போன்ற இட்லிக்கு கோபம்,
பூவைவிட மென்மையான
அவள் விரல்கள் படாதபடி
இடையில் நீள்கிறது தேக்கரண்டி!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வடித்ததில்லை...

வடித்ததில்லை - கருப்புத்திரையில் பயணிக்கும்
வெள்ளை பௌர்ணமியை கவிதையில்
வடித்தவர் மத்தியில்,
வெள்ளைத்திரையில் உலாவும்
அவள் கருப்பு விழியைப்பற்றி கவிதை
இதுவரை எவரும் வடித்ததில்லை!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இரவும் பகலும்...

ஒளி வீசும் ஞாயிரை எந்திய பகலாய்
பிரகாசமான அவள் முகம்,
அதை தழுவியபடி;
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை தாங்கிய இரவாய்,
நீர்த்துளிகள் கோர்த்த
(துவட்டப்படாத) அவள் கூந்தல்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
- தூரல் தூவும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக