வெள்ளி, ஆகஸ்ட் 25, 2006

எது அழகோ?


எது அழகோ...
புற்களின் மத்தியில் மின்னும்
பனித்துளி...
இமைகளின் நடுவில் ஒளிரும்
அவள் விழி...

எது அழகோ...
தென்றலுடன் தோள்தொட்டு சிறகடிக்கும்
அவள் துப்பட்டா...
போட்டியாய் அதன் மேல்தொட்டு பறக்கும்
அவள் கூந்தல்...

எது அழகோ...
அடிக்கும் குளிருக்கு துப்பட்டா
அவளுக்கு போர்வையாவது...
போடும் தூறலுக்கு அதுவே
அவளுக்கு குடையாவது...

எது அழகோ...
தலை தாழ்த்தி விழிசுடர் தூக்கி
மெலிதாய் ஒரு புன்னகை...
தலை சாய்த்து ஒரு கண் மூடி
பெரிதாய் ஒரு சிரிப்பு...

எது அழகோ...
தன்னைத்தானே அவள் சுற்றும்போது
அவளை சுற்றும் ஒற்றை ஜடை...
துள்ளிக்குதித்து அவள் வரும்போது கற்றில்
அலையென பறக்கும் அவள் விரிந்த கூந்தல்...

2 கருத்துகள்:

தினேஷ் சொன்னது…

உங்கள் கவிதையும் அழகு...

தினேஷ்

Divya சொன்னது…

அழகோ அழகு.......

வாரே வா! கலக்கல்ஸ்!

சதீஷ் ரொம்ப ரொம்ப ரசித்தேன் உங்கள் 'அழகு' கவிதையை.