திங்கள், மார்ச் 31, 2008

மீண்டும்..... காதல் :)

[எந்த காரணத்துக்காக சென்றேனோ அது நினைத்தபடி போகாததால் (வழக்கம்போல்) திரும்பிவிட்டேன்! அதுபாட்டுக்கு நடக்கும்போது நடக்கட்டும் நாம திரும்பவும் கிறுக்கவேண்டியதுதான் :)]



பட்டின் இறகுகள்,
தென்றல் தொடத்துடிக்கிறது...
உன் கண்கள் தழுவிய
என் விரல்கள் போல்


பூவின் இதழ்கள்,
புல்வெளி இஸ்பரிசிக்கத்துடிக்கிறது...
உன் முகம் பதிந்த
என் மார்பு போல்

மஞ்சள் ஆதவன்,
தொடுவானம் ஏந்தத்துடிக்கிறது...
உன் கன்னம் தாங்கிய
என் தோள் போல்


இலைகள் போர்த்தி,
ஈரமணல் நுகரத்துடிக்கிறது...
உன் கூந்தல் மூடிய
என் முகம் போல்

பனித்துளி போர்த்தி,
மொட்டு மலரத்துடிக்கிறது...
உன் இமை மறைத்த
என் விழிகள் போல்

'

'

ரோஜாவின் இதழ்கள்,
இன்னும் சிவக்கத்துடிக்கிறது...
உன் முத்தத்தால்
என் உதடுகள் போல் :)

திங்கள், மார்ச் 17, 2008

நிஜம் இரசிக்கும் காலம்...!

'


கனவுகளின் தேசமிது

கற்பனைகள் இனிவாராது,

கவிதைகளின் வாசலது

காற்றும் சற்று தாமதிக்குது,

நினைவுகளின் முற்றம் அது

புன்னகைகளின் தொடர்சியும் அது,

இனி நிஜம் இரசிக்கும் காலம் இது!


கிறுக்கியவரை போதும்!


கற்பனைகளுக்கு வந்தது பஞ்சம், ஏனெனில் நிஜம்தனை இரசிக்கும் காலம் இதோ :)

வரிகளுக்கு சற்று ஓய்வு சொல்லி செல்கிறேன் அதுவரை, கவிதை ஒன்றே கவிபாடும் அழகை கீழே கண்டு இரசியுங்களேன்!

கொள்ளை அழகு...


என் பதிவுகளை இரசித்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!!

அன்புடன்
சதீஷ்

ஞாயிறு, மார்ச் 02, 2008

புன்னகை-தேன் :)


இரவும் பகலும் முத்தமிட்டுக்கொள்ள
விடியல் புன்னகைக்கிறது

ஜன்னலோரமாய் குயில்வந்து பாட
தென்றல் புன்னகைக்கிறது

மெல்லநான் சோம்பல் முறிக்க
தலையனை புன்னகைக்கிறது

கடமைகள் முடித்து குளியல்போட
வெந்நீர் புன்னகைக்கிறது

வாசம் தெளித்து எடுத்து உடுத்த
துணிகள் புன்னகைக்கிறது

தேநீர் அருந்த பாலை காய்ச்ச
சுடும் ஆவி புன்னகைக்கிறது

நாள்தனைதொடங்க கால்கள் பயணிக்க
பாதை புன்னகைக்கிறது

மெதுவாய் தூவும் தூரலில் ஒளிசிதற
வானவில் புன்னகைக்கிறது

பாதையோரமாய் புதிதாய் பூக்கள் மலர
பூவிதழ்கள் புன்னகைக்கிறது

சாலையில் அன்னையின்
பிடியிலிருந்து குதித்தோடும் மழலை
எனைநோக்கி புன்னகைக்க,
அட!!
என் இதழ்களும் இதோ புன்னகைக்கிறது :)