ஞாயிறு, மார்ச் 02, 2008

புன்னகை-தேன் :)

இரவும் பகலும் முத்தமிட்டுக்கொள்ள
விடியல் புன்னகைக்கிறது

ஜன்னலோரமாய் குயில்வந்து பாட
தென்றல் புன்னகைக்கிறது

மெல்லநான் சோம்பல் முறிக்க
தலையனை புன்னகைக்கிறது

கடமைகள் முடித்து குளியல்போட
வெந்நீர் புன்னகைக்கிறது

வாசம் தெளித்து எடுத்து உடுத்த
துணிகள் புன்னகைக்கிறது

தேநீர் அருந்த பாலை காய்ச்ச
சுடும் ஆவி புன்னகைக்கிறது

நாள்தனைதொடங்க கால்கள் பயணிக்க
பாதை புன்னகைக்கிறது

மெதுவாய் தூவும் தூரலில் ஒளிசிதற
வானவில் புன்னகைக்கிறது

பாதையோரமாய் புதிதாய் பூக்கள் மலர
பூவிதழ்கள் புன்னகைக்கிறது

சாலையில் அன்னையின்
பிடியிலிருந்து குதித்தோடும் மழலை
எனைநோக்கி புன்னகைக்க,
அட!!
என் இதழ்களும் இதோ புன்னகைக்கிறது :)

34 கருத்துகள்:

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

புன்னகைத் - தேன் !!! :)))

Dreamzz சொன்னது…

நல்ல கவிதை :)
சிம்பிள் அண்ட் நீட்!

Dreamzz சொன்னது…

/ உடுத்ததுனிகள் //

should be

துணிகள் :)

Divya சொன்னது…

புன்னைகக்க வைத்தது கவிதை!

ஒவ்வொரு புன்னகையிலும் எத்தனை எத்தனை அழகு......சிம்பிளி சூப்பர்ப்!!

Praveena சொன்னது…

அன்றைய நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு புன்னகை புதைந்துதான் இருக்கிறது...அதை இத்தனை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள், மிகவும் ரசித்தேன் சதீஷ்:)))

\மெல்லநான் சோம்பல் முறிக்கதலையனை புன்னகைக்கிறது\\

பிடித்திருந்தது இவ்வரிகள்!!

நிவிஷா..... சொன்னது…

கவிதை அழகு

நட்போடு
நிவிஷா

ஜி சொன்னது…

:)))

நைஸ் ஒன்....

ஸ்ரீ சொன்னது…

இரவும் பகலும் முத்தமிட்டுக்கொள்வதை படிக்கும் போதே நானும் புன்னகைக்க ஆரம்பித்து விட்டேன். எங்கேயாது கொஞ்சம் காதலை சேர்த்திருக்கலாமே :D. காதல் இல்லாமலும் கவிதை அழகாய் தான் இருக்கின்றது :)

தினேஷ் சொன்னது…

புன்னகைத் - தேன் கவிதை படித்ததில் என் மனதும் புன்கைக்கிறது...

வாழ்த்துக்க்களுடன்,
தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
புன்னகைத் - தேன் !!! :)))
//

வாங்க நவீன்!
புன்னகைத்ததற்கு நன்றி :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// Dreamzz said...
நல்ல கவிதை :)
சிம்பிள் அண்ட் நீட்!
//

தேங்கஸ் Dreamzz :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Dreamzz said...
/ உடுத்ததுனிகள் //

should be

துணிகள் :)
//

பிழையை காட்டியமைக்கு நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Praveena Jennifer Jacob said...
அன்றைய நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு புன்னகை புதைந்துதான் இருக்கிறது...அதை இத்தனை அழகாக வர்ணித்திருக்கிறீர்கள், மிகவும் ரசித்தேன் சதீஷ்:)))

\மெல்லநான் சோம்பல் முறிக்கதலையனை புன்னகைக்கிறது\\

பிடித்திருந்தது இவ்வரிகள்!!
//

பிடித்ததா இப்ரவீணா!

இரசிக்கும்படியாக இருந்ததா :) நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
புன்னைகக்க வைத்தது கவிதை!

ஒவ்வொரு புன்னகையிலும் எத்தனை எத்தனை அழகு......சிம்பிளி சூப்பர்ப்!!
//

'ஒவ்வொரு புன்னகையிலும் எத்தனை எத்தனை அழகு' - அட :) கலக்குறீங்க திவ்யா!! தருகைக்கு நன்றி

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நிவிஷா..... said...
கவிதை அழகு

நட்போடு
நிவிஷா
//

சுருக்கமான உங்கள் பின்னூட்டம் அதனினும் அழகு நிவிஷா :))

தருகைக்கு மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
:)))

நைஸ் ஒன்....
//

புன்னகை சிந்தி போனதற்கு மிக்க நன்றி ஜி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// ஸ்ரீ said...
இரவும் பகலும் முத்தமிட்டுக்கொள்வதை படிக்கும் போதே நானும் புன்னகைக்க ஆரம்பித்து விட்டேன். எங்கேயாது கொஞ்சம் காதலை சேர்த்திருக்கலாமே :D. காதல் இல்லாமலும் கவிதை அழகாய் தான் இருக்கின்றது :)
//

புன்னகைக்க வைத்ததா ஸ்ரீ?? மிக்க நன்றி :)

உங்க ஏக்கம் புரியது ஸ்ரீ :))

கொஞ்சமும் சோகமில்லாமல் ஒன்னு எழுதனும்னு அன்பர்கள் கேட்டதாலோ என்னவோ வேற எதையும் சேர்க்கவில்லை :)))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//தினேஷ் said...
புன்னகைத் - தேன் கவிதை படித்ததில் என் மனதும் புன்கைக்கிறது...

வாழ்த்துக்க்களுடன்,
தினேஷ்
//
மனம் புன்னாகைத்ததா தினேஷ் :))
வாழ்த்துக்களுக்கு நன்றி!

மொத்தத்தில் சோகமில்லாமல் ஒரு கவிதை எழுதிவிட்டேனா :)))

கதிர் சொன்னது…

தோழரே,
கவிதை மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்.
கதிர்.

KARTHIK சொன்னது…

தொலைத்த மௌனங்கள்!
புன்னகையாய் !

நீண்ட நாட்களுக்கு பிறகு புன்னகையாய் ஒரு பதிவு.
பகிர்ந்தமைக்கு
நன்றி சதீஷ்.

வினையூக்கி சொன்னது…

உங்கள் கவிதைப்படித்து என் மனமும் புன்னகைக்கிறது. புன்னகையுடன் விரல்கள் உங்களுக்குப் பின்னூட்டமும் இடுகிறது.
அதிகப் புன்னகைக் கவிதைகள் தாருங்கள்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கதிர் said...
தோழரே,
கவிதை மிகவும் அருமையாக எழுதி உள்ளீர்.
கதிர்.
//

வாருங்கள் கதிர் :))

பாரட்டிற்கு மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
தொலைத்த மௌனங்கள்!
புன்னகையாய் !

நீண்ட நாட்களுக்கு பிறகு புன்னகையாய் ஒரு பதிவு.
பகிர்ந்தமைக்கு
நன்றி சதீஷ்.
//

மௌனங்கள் புன்னகையாய் போனதோ :))

படித்துவிட்டு வாழ்த்தியமைக்கு நன்றி நான் கூறவேண்டும் கார்த்திக்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//வினையூக்கி said...
உங்கள் கவிதைப்படித்து என் மனமும் புன்னகைக்கிறது. புன்னகையுடன் விரல்கள் உங்களுக்குப் பின்னூட்டமும் இடுகிறது.
அதிகப் புன்னகைக் கவிதைகள் தாருங்கள்.
//

வாருங்கள் வினை :)

வேலைபளுவின் மத்தியிலும் நட்சத்திரம் வந்து என்னை வாழ்த்திப்போனது என் பாக்கியம்! மிக்க நன்றி நண்பரே:)

எழில்பாரதி சொன்னது…

அருமையான‌ கவிதை!!!!

Divya சொன்னது…

\\//நிவிஷா..... said...
கவிதை அழகு

நட்போடு
நிவிஷா
//

சுருக்கமான உங்கள் பின்னூட்டம் அதனினும் அழகு நிவிஷா :))\\

அட இங்க பாருடா,
சுருக்கமான பின்னூட்டம் தான் அழகாம், அப்போ.......பெரிய பின்னூட்டம் போட்டா 'அசிங்கமா'யிருக்குன்னு சொல்லிடுவீங்களா??

Divya சொன்னது…

\பிடித்ததா இப்ரவீணா!

இரசிக்கும்படியாக இருந்ததா :) நன்றி!\

அதென்ன 'இ'ப்ரவீனா??
Praveena = ப்ரவீனா தானே,
நீங்களே அவங்களுக்கு இன்ஷியல் போட்டு எழுதுறீங்க???

Divya சொன்னது…

\\சாலையில் அன்னையின்பிடியிலிருந்து குதித்தோடும் மழலை எனைநோக்கி புன்னகைக்க,அட!!என் இதழ்களும் இதோ புன்னகைக்கிறது :)\\

மழலை மழலையை பார்த்து புன்னகைப்பதில் ஆச்சரியமில்லையே!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

/Divya said...
\\//நிவிஷா..... said...
கவிதை அழகு

நட்போடு
நிவிஷா
//

சுருக்கமான உங்கள் பின்னூட்டம் அதனினும் அழகு நிவிஷா :))\\

அட இங்க பாருடா,
சுருக்கமான பின்னூட்டம் தான் அழகாம், அப்போ.......பெரிய பின்னூட்டம் போட்டா 'அசிங்கமா'யிருக்குன்னு சொல்லிடுவீங்களா??
//

வாங்க madam :)) ஏதோ ஒரு முடிவோடத்தான் வந்துருக்குற மாதிரி தெரியுது!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
\பிடித்ததா இப்ரவீணா!

இரசிக்கும்படியாக இருந்ததா :) நன்றி!\

அதென்ன 'இ'ப்ரவீனா??
Praveena = ப்ரவீனா தானே,
நீங்களே அவங்களுக்கு இன்ஷியல் போட்டு எழுதுறீங்க???
//

மெய் எழுத்துல வார்த்தைகள் தொடங்க கூடாதுன்னு பள்ளிகூடத்துல தமிழ் வாத்தியார் சொல்லித்தந்தாருங்க அதத்தானுங்க பின்பற்றியிருக்கேன் :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
\\சாலையில் அன்னையின்பிடியிலிருந்து குதித்தோடும் மழலை எனைநோக்கி புன்னகைக்க,அட!!என் இதழ்களும் இதோ புன்னகைக்கிறது :)\\

மழலை மழலையை பார்த்து புன்னகைப்பதில் ஆச்சரியமில்லையே!!
//

ஹையா கண்டுபிடிசிட்டீங்க!! நீங்க ரொம்ப நல்லவங்க திவ்யா அவ்வ்வ்வ் :))))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//எழில் said...
அருமையான‌ கவிதை!!!!
//
வாங்க எழில் :)

உங்கள் வருகை இனிதாகட்டும்!
வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

தமிழ் சொன்னது…

அருமையான வரிகள்

CVR சொன்னது…

இப்பொழுது எனது உதடுகளிலும் புன்னகை!
வாழ்த்துக்கள்! :-)