செவ்வாய், ஆகஸ்ட் 22, 2006
நினைவுகள்...
காலம், அது விரைந்து போகும்
பல நினைவுகள், அதில் கறைந்து போகும்
சிலரைப்பற்றிய நினைவுகள்
அதனில் அந்த காலம் கூட மறைந்து போகும்
மனதில் நிறைந்திருக்கும் நினைவுகளை எவ்வாறு எடுக்க?
எடுத்த அந்த நினைவுகளை எவ்வாரு அடுக்க?
ஒன்றா இரண்டா அவைகள், இருவரிகளில் தொடுக்க!
சிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போது
அங்கே நினைவுகள் மறைந்துபோகின்றன
வேறுசிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போது
அங்கே நினைவுகள் வலுபெருகின்றன
இன்னும் சிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போதும்
அங்கே நினைவுகள் மறைந்துபோகவோ வலுபெறவோ
அவசியமற்று போகின்றன
நினைவுகளின் தாக்கம்...
அருகிலிருந்தும் பலர் தொலைவாய்!
தொலைவிலிருந்தும் சிலர் அருகாய்!!
வாழ்க்கை எனும் தோட்டத்தில் சந்திப்புகள் செடிகளாகலாம்
சந்திப்பு எனும் செடியில் அறிமுகங்கள் பூக்களாகலாம்,
காலப்போக்கில் வாடக்கூடியவை அவை
யுகப்போக்கில் முகம் மறந்து போகலாம்
சந்திப்பு எனும் செடியில் நினைவுகள் விதைகளாகலாம்,
விருட்சங்களை தாங்கி நிற்க்கக்கூடியவை அவை
விதைக்கப்பட்டு பின் மீண்டும் உதிக்கும் மலரும் நினைவுகளாகலாம்
காலம், அது விரைந்து போகும்
பல நினைவுகள், அதில் கறைந்து போகும்
சிலரைப்பற்றிய நினைவுகள்
அதனில் அந்த காலம் கூட மறைந்து பொகும்.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
\\சிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போது
அங்கே நினைவுகள் மறைந்துபோகின்றன
வேருசிலருடன்
தோலைவு அதிகரிக்கும் போது
அங்கே நினைவுகள் வலுபெருகின்றன\\
யதார்த்தமான உண்மை.
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு இந்த 'நினைவுகள்'!
இருவரியில் தொடுக்க முடியாது நினைவுகளை,
காலத்தின் கோலத்தால் சில நினைவுகள் கரைந்து போவது ஏனோ?
கால ஓட்டத்திலும் நினைவில் நீங்காதிருக்கும் சில நினைவுகள் ஏன்??
விடை தெரியுமா கவிஞரே???
உங்கள் 'கவி'குழந்தைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த குழந்தையான 'நினைவுகள்' அருமை சதீஷ்!
வாழ்த்துக்கள்!!
கருத்துரையிடுக