சனி, ஏப்ரல் 19, 2008

மலரா!!


மலராமல் நிற்கின்றன
நீர்விட்ட பூக்கள்
காற்றில் மிதக்கும்
கந்ததகங்களில் மூச்சுத்திணறி

முடிக்கப்படாமல்
இறைந்து கிடக்கின்றன
கிறுக்கிவைத்த காகிதங்கள்,
மையிட உதிரமுமின்றி
காய்ந்துகிடக்கும் எழுதுகோல்
'
சற்றுமுன் கைகாட்டி
புன்னகைத்த அன்னை
வின்னிலிருந்து விழுந்த
காலனின் காலடியில்,
வீதியெங்கும் தேடித்திரியும் மழலை

கனவுகள் சுமந்த கவிதைகள்
மணற்குவியலின் மத்தியில்
கசங்கிய பூக்களாய்,
சோலையது பாலையாய்

இரைகள் ஏராளமாயினும்
கழுகுகள் பறக்கக்கூட
வின்னில் இடம்தாரா
போர் மேகங்கள்

உயிர் மட்டும் போதும்
இங்கே கடல்கடக்கும்
முடிவில்லா பயணத்தின் தொடக்கம்

எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!
'
'
நிலாரசிகன் அவர்களின் இந்த கவிதை மற்றும் நண்பர் கார்த்திக் அவர்களின் இந்த பதிவு மூலம் பார்த்த படம், இரண்டின் தாக்கத்தில் கிறுக்கியது இது!

13 கருத்துகள்:

தினேஷ் சொன்னது…

ஈழ சகோதர சகோதரிகளின்
கண்ணிர் கவிதையாய்...

தினேஷ்

பெயரில்லா சொன்னது…

//
எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!//
உண்மைதான் ..இதற்கு எல்லாம் என்றுதான் ஒரு முடிவு வருமோ

Divya சொன்னது…

\\எழுதுகோல்'சற்றுமுன் கைகாட்டிபுன்னகைத்த அன்னைவின்னிலிருந்து விழுந்தகாலனின் காலடியில்,வீதியெங்கும் தேடித்திரியும் மழலை\\

கண்களில் கசிந்தது கண்ணீர்....

இவ்வரிகளை படித்ததும், சமீபத்தில் கப்பியின் பதிவில் படித்த திரைவிமர்சனத்தில், போர் நடக்கும் இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பும் அவர்களது நிலமை பற்றிய வரிகளும் நினைவிற்கு வந்தன.
http://kappiguys.blogspot.com/2008/04/1-innocent-voices.html

முடிவில்லா இப்போர் எப்போது முடிவுறும்....என ஏங்க வைத்தது உங்கள் கவிதையின் வரிகள்.

ரொம்ப நல்லா எழுதியிருக்கிறீர்கள் சதீஷ்.

தமிழ் சொன்னது…

/எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!/

முரண்டுப்பிடிக்கும்
முடிவால்
முடிவில்லாத பயணம் தான் ஈழம்

சத்யா சொன்னது…

எதிரிகளும் அன்பர்களும்
அங்கே அடையாளம் தெரியாமல்,
முடிவில்லா பயம்தனில் ஈழம்!

-- enna seyya! oru silaring political gainskaaga ipdi ellarum kashtapadaranga. :(

unga kavidhai rombave yosika veikuthu sathish.

KARTHIK சொன்னது…

//முடிக்கப்படாமல்
இறைந்து கிடக்கின்றன
கிறுக்கிவைத்த காகிதங்கள்,
மையிட உதிரமுமின்றி
காய்ந்துகிடக்கும் எழுதுகோல்.//

Divya said...
//முடிவில்லா இப்போர் எப்போது முடிவுறும்....என ஏங்க வைத்தது உங்கள் கவிதையின் வரிகள்.//

நிவிஷா..... சொன்னது…

yenna solrathuney therila(:

manasa kashta paduthiduchu unga kavithai.

natpodu
Nivisha.

ஜி சொன்னது…

arumaiyaana varigal... Moondru muRai vaasiththen....

EeZa makkalukkaaga Iraivanidam venda mattume mudiyum :(((

ஸ்ரீ சொன்னது…

ஆழமான அர்த்தங்கள் கவிதையின் அழகை கூட்டுகின்றது. சூப்பர்.

காஞ்சனை சொன்னது…

//உயிர் மட்டும் போதும்
இங்கே கடல்கடக்கும்
முடிவில்லா பயணத்தின் தொடக்கம்//

வலி பிழிந்து எழுதப்பட்ட வார்த்தைகள்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைத்து அன்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!!!

கப்பி | Kappi சொன்னது…

:(

அருமை!

rahini சொன்னது…

kanner sinthiya kavi variakl

anpudan
rahini