சனி, டிசம்பர் 08, 2007

என் ஜன்னலோரம்...


என் ஜன்னலோரம் பூக்கும் ரோஜாவே
தனிமை இரவு இது
துயிலும் நகரம் இது
விழித்திருப்பது நீயும் நானும்

அந்நிய பூமி இது எனை
அந்நியனெனும் தேசம் இது
அன்யோன்யமாய் நீ மட்டும்
அன்பு ரோஜவே

தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ

கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்

பிரிந்தபோதும் பிரியாததாய் பிரிந்த
தருணத்தில் அவள் கண்களில் கொண்ட
கண்ணீர்துளி போல் உன் இதழ்களில்
ஏந்திய பனிதுளியும் ஏனோ

ஞாபகங்களை மறக்க
நினைவுகளை கடந்து வந்தேன்
நினைவுகளை மீண்டும் ஞாபகங்களாக்கி
எனை கொல்வதும் ஏனோ

விடியல் விளிக்கும் நேரமிது
நகரம் இன்னும் விளிக்கவில்லை
நாமோ இன்னும் துயிலவில்லை
மலர்ந்து கொண்டிருக்கிறோம் ரோஜாவே

பொழுதும் விடிந்தது
நாளும் மலர்ந்தது
உடன் நாமும் ரோஜவே

சற்றே சென்று நாளின்
முடிவில் திரும்புகிறேன்
என் ஜன்னலோர ரோஜாச்செடியே
அதுவரை காத்திரு
நாம் இரவில் மீண்டும் மலர்வோம்...

7 கருத்துகள்:

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ//

அட ரோஜாவின் முட்களுக்கு
இப்படி ஒரு விளக்கமா?
அழகு சிந்தனை சதீஷ் !!

எப்பொழுதும் மலரட்டும்
ஜன்னலோரம் ரோஜா ... :))))

Divya சொன்னது…

\\கூந்தலின் வளவளப்பில்
வழுக்கிவிழும் பயத்தில்
பற்றிக்கோள்ள முட்கள் கொண்டாயோ
அதே பயத்தில்தான் விரல்களில்
சற்றே நகங்கள் கொண்டேன்\\

ரோஜா செடியின் முட்களுக்கு இப்படி ஒரு ஒப்பிடுதலும், விளக்கமுமா?
வாவ்......மிகவும் ரசித்தேன் உங்கள் ரோஜா மலரோடான தனிமை கவிதையை!
பாராட்டுக்கள் !!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

நன்றி நவீன் மற்றும் திவ்யா

தினேஷ் சொன்னது…

அருமையான, அன்பான, ஆச்சரியமான, ஆறுதலான, ஆழமான கவிதைகள்...

படித்து பிடித்த வலைப்பதிவுகளில் உங்கள் வலைப்பதிவும் ஓன்று, உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன்.

தினேஷ்

தினேஷ் சொன்னது…

அருமையான, அன்பான, ஆச்சரியமான, ஆறுதலான, ஆழமான கவிதைகள்...

படித்து பிடித்த வலைப்பதிவுகளில் உங்கள் வலைப்பதிவும் ஓன்று, உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன்.

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//படித்து பிடித்த வலைப்பதிவுகளில் உங்கள் வலைப்பதிவும் ஓன்று, உங்கள் எழுத்துக்களை எதிர்நோக்கி இருக்கிறேன்.//

என்னை ஊக்குவிக்கும் தங்களின் வார்த்தைகளுக்கு நன்றி தினேஷ்

Rasiga சொன்னது…

ஜன்னலோர 'ரோஜா'வுடனான உங்கள் உரையாடல் கவிதை மிக அழகு.

\\தொலைவாய் வந்தாலும் முகம்
தொலைந்து போய்விடாமல்
தொல்லை கொடுக்க
தொலைவில் இருந்து
உன்னை அனுப்பினாளோ\\

அன்புத்தொல்லைகள் ஒரு விதமான சுகம், இல்லியா சதீஷ்?
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது.

எவ்வளவு தொலைதூரம் போனாலும் , மனதில் ஆழ பதிந்த முகம் தொலைந்து போகுமா?

ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு இந்த கவிதை, நான் மிகவும் ரசித்தேன்.