செவ்வாய், டிசம்பர் 25, 2007

பூக்களில் உறங்கும் மௌனங்கள்


புரிந்தபோதும் புரியவைக்க இயலா
சுயத்தின் சிந்தனைகள்

தீட்ட விரும்பி வரையாது
கிழித்த ஓவியங்கள்

வடிக்க நினைத்து எழுதாது
அழித்த வரிகள்

மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்

சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்

தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்

என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்

அவளின் கேள்விகளுக்கான பதிலை
மொழியாமலே கடத்திய நொடிகள்


என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்

17 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

கவிதை அருமை - எளிமை. கருத்துச் சிந்தனை பாராட்டத் தக்கது.

எழுத்துப் பிழைகள் - தவிர்த்திருக்கலாம்.

எழுதிய பின் ஒரு முறை சரி பார்க்கவும்.

cheena (சீனா) சொன்னது…

தீட்ட விரும்பி வரையாது
கிழிந்த ஓவியங்கள்

கிழிந்த - கிழித்த என இருக்க வேண்டுமோ ??

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

நன்றி சீனா

Review செய்து விட்டேன் :) பிழைகள் எதேனும் மீதம் இருக்கிறதா?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
கிழிந்த - கிழித்த என இருக்க வேண்டுமோ ??
//

நிங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். மாத்திட்டேன் :)

Rasiga சொன்னது…

\\என் பிழைக்கு தண்டனை ஏற்றபோதும்
இதழ் திறக்கா நண்பனின் காரணங்கள்\\

நான் மிகவும் ரசித்த வரிகளில் இதுவும் ஒன்று!

மிக அருமையாக இருக்கிறது தங்களது கவிதைகள், ரசித்தேன்!

Rasiga சொன்னது…

கவி போட்டியில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்......!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

@ rasiga said
//
நான் மிகவும் ரசித்த வரிகளில் இதுவும் ஒன்று!

மிக அருமையாக இருக்கிறது தங்களது கவிதைகள், ரசித்தேன்
//

வாங்க இரசிகா

தங்களின் பாராட்டிற்க்கு நன்றி. அடிக்கடி வருகை தாருங்கள் :))

தினேஷ் சொன்னது…

ரொம்ப நல்ல கவிதை…

தினேஷ்

Divya சொன்னது…

ஹாய் சதீஷ்,
நச்சென்ற கவிதை போட்டிக்கு நீங்க கவிதை எழுதலாமேன்னு சொல்லலாம்னு உங்க ப்ளாக்குக்கு வந்தால்......நீங்க ஆல்ரெடி சூப்பரா ஒரு கவிதை போட்டிக்கு போட்டு தாக்கிருக்கிறீங்க!

வாவ், ரொம்ப நல்லாயிருக்கு கவிதை,

போட்டியில் வெற்றி வாகை சூட என் வாழ்த்துக்கள்.

Divya சொன்னது…

\\தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள்\

சில நேரம்,
சில வார்த்தைகள், சில ஆசைகள்......நமக்குள்ளேயே மெளனமாக மறைந்து விடுகிறது இல்லியா??

அழகான வரிகள்,
எல்லா வரிகளும் ரொம்ப அருமையா இருக்கு.

உங்களுக்குள் உறங்கும் மெளனங்கள் விழிக்க என் வாழ்த்துக்கள்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

@divya

வாங்க திவ்யா... போட்டில கலந்துக்க சொல்லும் எண்ணத்தோடு நீங்க வந்ததில் ரோம்ப மகிழ்ந்தேன்! வழ்த்துக்களுக்கு நன்றி :))

Rasiga சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Marutham சொன்னது…

Arumayaana kavidhai! :)

//என மனதின் ஆழத்தில்
மலராது போன பூக்களே
உங்களில் உறங்கும் மௌனங்கள்
என்னுள் இனியேனும் விழிக்கட்டும்//
Beautiful lines ...

Puthaandu nalvazhthukkal!

Thangal varugaikku nandri....
See u again!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//மொழிய நினைத்து பேசாது
ஊமையான வார்த்தைகள்

சந்திக்க நினைத்து பார்க்காது
மறைந்த முகங்கள்

தொண்டைக்குள் சிக்கி கடைசிவரை
வெளிவரமறுத்த விருப்பங்கள் //

மிகவும் ரசித்தேன் ... சதீஷ்...

தொண்டைக்குள் சிக்கிய வார்த்தைகளை விட்டுவிடக்கூடாது.... :))))

ஆழமான ஏக்கங்கள் ...
அருமையான மொழிவு...

Subramanian Ramachandran சொன்னது…

dude..... u are satish.oxygen rite?? ungal kavithai nadai lam romba nalla irukku..... and the best thing is..... kavithai nu silar ezhutharatha padikkumbothu engayo padicha maathiri, illa erkanave kettathai vera vadivathula paartha maathiri oru feel irukkum..but in urs, antha vishayam venumna erkanave padichiruppene thavira, the usage of words fresh ah than irukku :), of course naan onnu rendu than padichaen... :D

and one ishmall suggestion.. konjam positive ah, happy feel oda oru poem ezhuthalamae appapa?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ நவீன் ப்ரகாஷ் said...

தொண்டைக்குள் சிக்கிய வார்த்தைகளை விட்டுவிடக்கூடாது.... :))))

ஆழமான ஏக்கங்கள் ...
அருமையான மொழிவு...
//
வாங்க நவீன்!

வார்த்தைகளை வெளியே விட்டுவிட கூடாது என்கிறீர்களா?:))

வாங்க நவீன்!

வெளியே விட்டுவிட கூடாது என்கிறீர்களா?:))

ஏரியா பக்கம் வந்தீங்க அதனால மன்னிக்கபட்டீர்கள் :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ rsubras said...

dude..... u are satish.oxygen rite?? ungal kavithai nadai lam romba nalla irukku.....
//

:)) I breath oxygen but sorry I am not sathish.oxygen!
பாராட்டுக்களுக்கு நன்றி..

//
and one ishmall suggestion.. konjam positive ah, happy feel oda oru poem ezhuthalamae appapa?
//

சோகமா இருக்கும் போதுதான் எழுதுறேனோ?? :))மனதின் ஆழத்தை தொடும் நிகழ்வுகளே பெரும்பாலும் வரிகளாகின்றன! நிச்சயம் எழுதுகிறேன்..
நன்றி