ஞாயிறு, ஜனவரி 13, 2008

மல்லிகை இரவுகள்...

பூமியின் ஈர்ப்பை எதிர்த்தபடி
இனியும் முடியாது என்றபோதும்
உன்முகம் காணும் காரணத்தால்
கரங்கள் சிவக்க முயற்சியைவிடாமல்
மெதுவாய் ஆதவன் கீழ்சாயும்காலம்

உனைபார்த்தபடி நான்
விழிகள் மட்டும் பார்த்தபடி நீ!
'
தொலைவில் பறக்கும் குயில்கள்
எழுப்பும் இனிய காணத்தை
சுமந்து நமைகடக்கும் காற்றின்
அலைகளுடன் கலந்து
அதனினும் இனிமையாய்
ஒலிக்கும் உன்பேச்சு
'
பேசுவது விழிகளா இல்லை
அசையும் உன் உதடுகளா
என்பதை என் விழிகள்
அறிந்த போதிலும்
உதடுகளையே இரசித்தன!
'
உதடுகள் இமைக்கமறந்த
பொழுதில் உணர்ந்தேன்,
வளையல்களில் ஒன்றோ
எனத்தோன்றும் உன்கைகடிகாரம்
கடந்துசெல்லும் உணரமுடியாத
காலத்தைகாட்டி சிரிப்பதை!

கவனித்தவளாய் 'நேரமாகிவிட்டது
பிறகுபார்க்கலாம்' என்று
உன் வழிநோக்கித்திரும்பினாய்
'
நீ திரும்பும்முன் சற்றேகவனித்தேன்,
குளித்துவிட்டு கூந்தல்துடைத்து தலைசீவி
நடுவாய் வைத்திருந்த வகுடை!
திரும்பியபின் அழகாய் தரிசித்தேன்,
இறையைதொழுது சூடியிருந்த மல்லிகையை!
'
நீயும் கடந்ததால்
உனை காணாது
வலுவெல்லாம் இழந்து
கதிரவன் வீழ்ந்தது,
மாலை மறைந்தது
மதியும் எழுந்தது
'
வகுடாய் என்னையும்
மல்லிகையாய் உன்னையும்
உன்னிடத்தில் வைத்துக்கொண்டாய்
பிரிக்கும் கூந்தல் பகுதியாய்
இந்த காரிரவு நம்மிடையே!
'
மல்லிகை நிலவை வகுடாய்
அணிவகுத்து நின்ற நட்சத்திரங்கள்
இப்பொழுது சூழ்ந்து நிற்கின்றன!

அதுபோல் கூந்தலைவென்று
வகுடு மல்லிகையை சூழும்
மல்லிகை இரவுகள்
தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,
கடந்து செல்லும் இந்த
தனிமை இரவுகளை
நான் கவிதையில் களிக்கிறேன்...

20 கருத்துகள்:

Divya சொன்னது…

\\உன்பேச்சு'பேசுவது விழிகளா இல்லைஅசையும் உன் உதடுகளாஎன்பதை என் விழிகள்அறிந்த போதிலும்உதடுகளையே இரசித்தன!'\\

வாவ்! சூப்பர் வரிகள் சதீஷ்!

\\குளித்துவிட்டு கூந்தல்துடைத்து தலைசீவிநடுவாய் வைத்திருந்த வகுடை!\\

அடேங்கப்பா......வகுடை வைத்து இப்படியும் கவிதை எழுத முடியுமா என வியக்க வைத்தது கவி வரிகள்.

\\நமைகடக்கும் கற்றின்அலைகளுடன் \

'காற்றின்' - > எழுத்துப்பிழை என கருதுகிறேன்.

Divya சொன்னது…

\\அதுபோல் கூந்தலைவென்றுவகுடு மல்லிகையை சூழும்மல்லிகை இரவுகள்தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,கடந்து செல்லும் இந்ததனிமை இரவுகளைநான் கவிதையில் களிக்கிறேன்...\\

உங்கள் நம்பிக்கை நிறைவேறட்டும், வாழ்த்துக்கள் சதீஷ்!

Divya சொன்னது…

\\வளையல்களில் ஒன்றோஎனத்தோன்றும் உன்கைகடிகாரம்\\

இந்த வரிகள் ரொம்ப நல்லாயிருக்கு,
வளையல் போன்ற மாடல்களில் பெண்கள் அணியும் கைக்கடிகாரத்தை இப்படி குறிப்பிட்டு எழுதியிருப்பது அருமை!

Divya சொன்னது…

டெம்ப்ளேட் புதுசா????
கலர் கண் கூசுது சதீஷ், கொஞ்சம் கம்மி பண்ணினா நல்லாயிருக்கும்னு தோனுது......just a suggestion!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

இமைக்க மறந்த
உதடுகள் !!! :)))

மிகவும் ரசித்தேன்....

தனிமை இரவுகளை அழகாக
களித்திருக்கிறீர்கள் சதீஷ் !!!

இரவுகள் நீளட்டும் ... :)))

Rasiga சொன்னது…

தனிமை இரவு தந்த கவிதை அழகு,
மிகவும் ரசித்தேன்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ divya said...

\\நமைகடக்கும் கற்றின்அலைகளுடன் \

'காற்றின்' - > எழுத்துப்பிழை என கருதுகிறேன்.
//

பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி திவ்யா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

\\ Divya said...
\\அதுபோல் கூந்தலைவென்றுவகுடு மல்லிகையை சூழும்மல்லிகை இரவுகள்தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,கடந்து செல்லும் இந்ததனிமை இரவுகளைநான் கவிதையில் களிக்கிறேன்...\\

உங்கள் நம்பிக்கை நிறைவேறட்டும், வாழ்த்துக்கள் சதீஷ்!
\\

வாழ்த்துக்களுக்கு நன்றி திவ்யா. ஆனா இதுல நம்பிக்கை என்னோடது இல்லிங்க.
வரிகள் மட்டும்தான் என்னோடது :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// Divya said...
டெம்ப்ளேட் புதுசா????
கலர் கண் கூசுது சதீஷ், கொஞ்சம் கம்மி பண்ணினா நல்லாயிருக்கும்னு தோனுது......just a suggestion!
//

கம்மி பண்ணிட்டேன். இப்ப ok'va திவ்யா??
Thanks for the suggestion!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//நவீன் ப்ரகாஷ் said...
இமைக்க மறந்த
உதடுகள் !!! :)))

மிகவும் ரசித்தேன்....

தனிமை இரவுகளை அழகாக
களித்திருக்கிறீர்கள் சதீஷ் !!!

இரவுகள் நீளட்டும் ... :)))
//

நன்றி நவீன்! இரவுகள் நீளட்டுமா?? அய்யோ வேண்டாமே :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Rasiga said...
தனிமை இரவு தந்த கவிதை அழகு,
மிகவும் ரசித்தேன்!
//

வாங்க இரசிகா :)
என்னோட வரிகளையும் நீங்க இரசிப்பது ஊக்கம் அளிக்கிறது.
நன்றி!

தினேஷ் சொன்னது…

சுவையான காதல்ப்பற்றி, சுத்த தமிழில் உங்கள் கவிதைகளைப் படிக்கும் போது மனது சுமைகள் சுமக்க மறந்து சுகமாக இருக்கிறது…

நல்ல கற்பனை, நல்ல கவிதை சதிஷ் ரொம்ப நல்ல எழுதி இருக்கிறிர்கள்…நாளுக்கு நாள் உங்கள் எழுதின் திறன் மேம்ப்பட்டு கொண்டே இருக்கிறது

பொங்கள் வாழ்த்துக்களுடன்..
தினேஷ்

தினேஷ் சொன்னது…

Sathish,

How r u? என்ன அண்மை நாட்களாக பதிவுகள் எதுவும் போடவில்லை?

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// தினேஷ் said...
Sathish,

How r u? என்ன அண்மை நாட்களாக பதிவுகள் எதுவும் போடவில்லை?

தினேஷ்
//

வாங்க தினேஷ்!!

நான் நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க??
:) பதிவு தானே போட்டுடாபோச்சு!
கொஞ்சம் மாட்டிகிட்டேன்! இனி சரியாகிடும். அன்போடு வந்து கேட்டதில் மிக்க மகிழ்ச்சி :)

Aruna சொன்னது…

நல்லா எழுதியிருக்கிறீங்க!கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் கவனித்து
எழுதவும்

வின்னில்--விண்ணில்
கவணித்தவளாய்--கவனித்தவளாய்
அன்புடன் அருணா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//aruna said...
நல்லா எழுதியிருக்கிறீங்க!கொஞ்சம் எழுத்துப் பிழைகளையும் கவனித்து
எழுதவும்
//

வாங்க அருணா :)
பிழைகளை சுட்டிகாட்டியமைக்கு நன்றி!

Dreamzz சொன்னது…

//அதுபோல் கூந்தலைவென்று
வகுடு மல்லிகையை சூழும்
மல்லிகை இரவுகள்
தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,
கடந்து செல்லும் இந்த
தனிமை இரவுகளை
நான் கவிதையில் களிக்கிறேன்...//
seekiram kalyanam pannungappa :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Dreamzz said...
//அதுபோல் கூந்தலைவென்று
வகுடு மல்லிகையை சூழும்
மல்லிகை இரவுகள்
தூரத்தில் தெரியும் நம்பிக்கையில்,
கடந்து செல்லும் இந்த
தனிமை இரவுகளை
நான் கவிதையில் களிக்கிறேன்...//
seekiram kalyanam pannungappa :)
//

உங்களுக்கு புரியுது ஹும்!! :)))

Praveena சொன்னது…

\\காற்றின்அலைகளுடன் கலந்துஅதனினும் இனிமையாய்ஒலிக்கும் உன்பேச்சு'பேசுவது விழிகளா இல்லைஅசையும் உன் உதடுகளாஎன்பதை என் விழிகள்அறிந்த போதிலும்உதடுகளையே இரசித்தன!'\

அழகான கவிதை,

மிகவும் உணர்ந்து எழுதியுள்ளீர்கள் என வரிகள் காட்டிக்கொடுக்கின்றன, வாழ்த்துக்கள்!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Praveena said...

அழகான கவிதை,

மிகவும் உணர்ந்து எழுதியுள்ளீர்கள் என வரிகள் காட்டிக்கொடுக்கின்றன, வாழ்த்துக்கள்!!
//

வாங்க Praveena :)

உணர்ந்து எழுதியிருக்கேனா!! கற்பனைகள்தான் Praveena :)பாராட்டிற்கு மிக்க நன்றி!