தரிசனத்திற்காக
ஆசையாய்
முன்னிரவிலிருந்து
விழித்திருந்து
உச்சகாட்சியில்
கண்கள் மூடிவிட்ட
விடிகாலை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மத்தாப்பு கொளுத்த
வேகமாய் வர
தீபாவளி இரவில்
முந்திக்கொண்ட மழை...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விளையாட்டாய்

பிடித்து வைத்து
பின்மனமிறங்கி
விடுவித்தபோது
உயிர் விட்டிருந்த
பட்டாம்பூச்சி...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கேட்க நினைத்த கேள்விகள்,

யூகித்திருந்த பதில்கள்,
பேச துடித்த வார்த்தைகள்,
எதுவுமே மொழியப்படாமல்
அந்த கடைசி மாலையில்
அவளை இழுத்து சென்ற இரயில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மனதில் ஆழமாய்
வேர்கொண்டும்
முளைக்க நீரின்றி
முடங்கிப்போன