திங்கள், டிசம்பர் 04, 2006

அன்பின் நிலையிலே...


சொல்லித்தெரிவதில்லை நட்பு நிலை
சொல்லாமல் தெளிவதில்லை காதல் நிலை

பார்வையில் பிறப்பதரிது நட்பு நிலை
பார்வையில் கூட மலர்வதுண்டு காதல் நிலை


காலமதன் ஓட்டத்தில் இனிய நினைவுகளாய்
தொடர்பற்று போகலாம் நட்பு நிலை
காலமதன் ஓட்டத்தில் அழகிய நிகழ்வுகளாய்

தொடர்ந்தோடலாம் காதல் நிலை

நில்லாது தொடர்ந்தால் வாழ்வில்
புன்னகை சேர்க்கலாம் நட்பு நிலை
தொடராது நின்றால் மனதில்
வற்றா கண்ணீராகலாம் காதல் நிலை

விட்டுகொடுத்தல் மாற்றிக்கொள்ளல்
தேவையற்று
அழகிய புரிதலில் செல்லும் சிறந்த நட்பு நிலை
விட்டுகொடுத்தும் சிலமாறுதல்கள் கண்டும் புரிதலை

கடந்த மேல்நிலையில் செல்லும் சி
றந்த காதல் நிலை

தொடநினைக்காவிட்டாலும் சில சமயங்களில்
தொட்டுபேசுவது அவசியமாகலாம் - நட்பு நிலை
தொடநினைத்தாலும் தள்ளி தொடாமல் பேசுவது
எப்போதும் அழகாகும் - காதல் நிலை

எனக்கு நீ உனக்கு நான் அழகாய் தேவை
என்று அன்பாய் செல்லும் நட்பு நிலை
எனக்கு நீ உனக்கு நான் என்றல்ல
நமக்கு நாம் நிச்சயமாய் தேவை
என்ற புரிதலில் செல்லும் காதல் நிலை

விதிகளை உணர்ந்து அதை மீறாது
அமைதியாய் செல்லும்
உன்னத நட்பு நிலை
விதிகளை அமைத்து அதை தாண்டாது

அழகாய் செல்லும் தூய காதல் நிலை

பலமுறை பலருடன் பல நிலைகளில்

வரும் இனிய நட்பு நிலை
ஒருமுறை ஒருவருடன் மட்டுமே
ஒரு நிலை
கடந்தே வரும் முதிர்ந்த காதல் நிலை

வாழ்கை பயணத்தில் முக்கிய நிகழ்வுகளை
அழகாய் பகிர்ந்து செல்லும் நெருங்கிய நட்பு நிலை
வாழ்கை பயணத்தின் முக்கிய பாதையை
அழகாய் பகிர்ந்து செல்லும் தேர்ந்த காதல் நிலை

அன்பும் அரவணைப்பும் இரண்டிலும் குறைவதில்லை
சற்றே உரிமை, பெரிதாய் தவிப்பு, அன்பாய் ஏக்கம்,

அழகாய் வெட்கம், அமைதியாய் எதிர்பார்ப்பு...
தவிர வேறுபாடு வேரில்லை

அதனதன் நிலைகளில் உன்னதமானவை
அதனதன் பரிமானங்களில் புனிதமானவை

வாழ்கை பயணத்தில், அறிவாய் வழிகாட்டி செல்லும்
நல்ல நட்பு நிலை
வாழ்கை பயணத்தில், அழகாய் அழைத்து செல்லும்
நல்ல காதல் நிலை


ஆதலால்...
நட்பே உனை வணங்குகிறேன்,
காதலே உனை போற்றுகிறேன்...

1 கருத்து:

Divya சொன்னது…

வாவ்! எவ்வளவு அருமையாக, துள்ளியமாக, நட்பு நிலையையும், காதலையும் கோடிட்டு காட்டியிருக்கிறீர்கள்,

மிகவும் ......மிகவும் ரசித்துப் படித்தேன் இந்த கவிதையை,

ஒவ்வொரு வரியும் அழகோ அழகு!!

மனமார்ந்த பாராட்டுக்கள் சதீஷ்!!

[ இந்த கவிதையின் சுட்டியை என் பதிவில் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தியமைக்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்!!]