கேள்விகள் விடையின்றி கழிந்தன என்னளவில்
கேள்விகளே இங்கில்லை அவளளவில்
இடையில் கடந்திருந்ததோ பரிதாபமாய் காலம்!
கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்
ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!
காரணங்கள் அவை அறிவதரிது
முகம் நான் இனி பார்ப்பதரிது
ஓர்முகம் என்றும் அறியாதது!
பாதைகள் மங்கும் தூரம் தூரத்திலில்லை
இருந்தும் காலம் இன்னும் முடிந்துவிடவில்லை
கேள்விகள் மீண்டும் உயிர்பெறலாம்
அதுவரை மீண்டும் நான் பேசும் ஊமையாய்!
ஒருமௌனம் கலைய வேறு உரை
ஒருகூண்டு திறக்க வேறு சிறை
இங்கே உரைகளும் சிறைகளும்
மட்டுமே மாறுகின்றன
அவள் தொலைத்தது அங்கே மறுமுகமா
நான் தொலைத்தது இதில் நிகழ்வுகளா
நாங்கள் தொலைத்தது இங்கே காரணங்களா
எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!
29 கருத்துகள்:
கணமான உணர்வுகளின் வெளிப்பாடு.....!!
\\அவள் தொலைத்தது அங்கே மறுமுகமா
நான் தொலைத்தது இதில் நிகழ்வுகளா
நாங்கள் தொலைத்தது இங்கே காரணங்களா\\
தவிர்க்க முடியாத சில பிரிவுகள்....ஏற்படுத்தும் ரணங்கள் என்றென்றும் ஆராது!!
\\ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!\
மனதை கவர்ந்தது இவ்வரிகள்!!
கவிதை நல்லாயிருக்கு கவிஞரே!!
\\கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்இறந்த அவைகளை நான்இறக்கும்வரை சுமக்கவைத்தாள்\\
மிகவும் ஆழமான உணர்வு வெளிப்பாடு,
வரிகளில் ஒருவித நிஜ வலியை உணர முடிந்தது.
பாராட்டுக்கள்:))
\\ஆரம்பங்கள் அழகுதான்அதில் தொடங்குவது புன்னகைகள்,தொலைந்ததாய் கூறும்போதுஎஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!\\
புன்னகை ஆரம்பங்கள்,
கண்ணீராய் முடிவது....வேதனையே!
உங்கள் கவிதைகளில் ஒருவித சோகமே எப்போதும் மிஞ்சுகிறதே, ஏன் அப்படி??
கேட்பதில் தவறில்ல என கருதுகிறேன்.
உற்சாகமளிக்கும் ஒரு அழகிய கவிதையை விரைவில் தங்களிடம் எதிர்பார்கிறேன்,
எதிர்பார்ப்பு நிறைவேறுமா???
இறந்த கேள்விகளை நான் இறக்கும்வரை சுமக்க வைத்தாள்..
ம்ம் ..உங்க கவிதைகளைப்படிக்கும்பொழுது, poetic sense குறைவாக இருக்கிற எனக்கு , கவிதை எழுத தோணவைக்கிறது.
உரைகளும் சிறைகளும் மட்டும் மாறுகின்றன... இன்னொரு அருமையான வரிகள்.
அடுத்தக் கவிதை கனமாக இல்லாமல் கலகலப்பாகத் தாருங்கள்
//@ Divya said...
கணமான உணர்வுகளின் வெளிப்பாடு.....!!
//
உணர்வுகள் தானே பலநேரங்களில் வரிகளாகின்றன திவ்யா!
// Divya said...
\\ஆரம்பங்கள் அழகுதான்
அதில் தொடங்குவது புன்னகைகள்,
தொலைந்ததாய் கூறும்போது
எஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!\
மனதை கவர்ந்தது இவ்வரிகள்!!
கவிதை நல்லாயிருக்கு கவிஞரே!!
//
மிக்க நன்றி கதாசிரியரே :))
// Rasiga said...
\\கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்இறந்த அவைகளை நான்இறக்கும்வரை சுமக்கவைத்தாள்\\
மிகவும் ஆழமான உணர்வு வெளிப்பாடு,
வரிகளில் ஒருவித நிஜ வலியை உணர முடிந்தது.
பாராட்டுக்கள்:))
//
வாங்க இரசிகா :)
பாராட்டிற்கு மிக்க நன்றி!
// Rasiga said...
\\ஆரம்பங்கள் அழகுதான்அதில் தொடங்குவது புன்னகைகள்,தொலைந்ததாய் கூறும்போதுஎஞ்சுவது நீர்துளிகள் மட்டுமே!\\
புன்னகை ஆரம்பங்கள்,
கண்ணீராய் முடிவது....வேதனையே!
உங்கள் கவிதைகளில் ஒருவித சோகமே எப்போதும் மிஞ்சுகிறதே, ஏன் அப்படி??
கேட்பதில் தவறில்ல என கருதுகிறேன்.
//
நிச்சயமாக தவறில்லை இரசிகா!மனதை ஆழமாய் தொடும் நிகள்வுகளே பெரும்பாலும் வரிகளாகின்றன. அது காரணமாக இருக்கலாம்!
// உற்சாகமளிக்கும் ஒரு அழகிய கவிதையை விரைவில் தங்களிடம் எதிர்பார்கிறேன்,
எதிர்பார்ப்பு நிறைவேறுமா???
//
எதிபார்பிற்கு நன்றி இரசிகா :) நிச்சயமாக நிறைவேற்ற முயலுவேன்!
// வினையூக்கி said...
இறந்த கேள்விகளை நான் இறக்கும்வரை சுமக்க வைத்தாள்..
ம்ம் ..உங்க கவிதைகளைப்படிக்கும்பொழுது, poetic sense குறைவாக இருக்கிற எனக்கு , கவிதை எழுத தோணவைக்கிறது.
உரைகளும் சிறைகளும் மட்டும் மாறுகின்றன... இன்னொரு அருமையான வரிகள்.
அடுத்தக் கவிதை கனமாக இல்லாமல் கலகலப்பாகத் தாருங்கள்
//
வாங்க வினையூக்கி,
தங்களையும் கவிதை எழுத தூண்டுகிறதா வரிகள் :))
மிக்க நன்றி! நிச்சயம் கலகலப்பாக தர முயல்வேன் வினையூக்கி!
கண்ணீர் அழகுதான் அவளுக்காக எனும்போது !!!
ரசித்தேன்...
ஆமாம் ஏன் சதீஷ் கண்ணீர் கவிதை.... ?? smile கவிதை plzz....
சதிஷ்,
//கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்//
எல்லாமே உணர்வுகளை தாங்கி நிற்கும் வார்த்தைகள்... ஆழமான உணர்வுகளை கொண்ட கவிதை...
தினேஷ்
//நவீன் ப்ரகாஷ் said...
கண்ணீர் அழகுதான் அவளுக்காக எனும்போது !!!
ரசித்தேன்...
//
வாங்க நவீன் :))
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் :))
இரசிக்க வைத்ததா?? நன்றி!!
//ஆமாம் ஏன் சதீஷ் கண்ணீர் கவிதை.... ?? smile கவிதை plzz....
//
கண்களில் தோன்றியதனால் நீர்துளிகள் கலந்துவிட்டதோ! இதழ்களில் வரைய முயலுகிறேன் :)
//தினேஷ் said...
சதிஷ்,
//கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்//
எல்லாமே உணர்வுகளை தாங்கி நிற்கும் வார்த்தைகள்... ஆழமான உணர்வுகளை கொண்ட கவிதை...
தினேஷ்
//
வாருங்கள் தினேஷ்!
தங்களின் தருகைக்கு மிக்க நன்றி :))
\\ எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோஇருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்! \\
மௌனத்தின் சப்தங்கள் மிகக் கொடுமையானவை சதீஷ்...
//எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!//
இசை ஞானியின் எனக்கு பிடித்த சில வரிகள் :
மௌனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை.
என் மௌனங்களையே உன்னால் புரிந்துகொள்ளமுடியாவிட்டால்
என் வார்த்தைகளை என்கிறிந்து புரிந்துகொள்ளப்போகிறாய்
//இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்//
அருமை சதீஷ்
எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோஇருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!\\
Nice lines Sathish,
sogathai pilinjiteenga:)
Natpudan
Nivisha.
அழகான கண்ணீர், கணமான கவிதை சூப்பர்
//எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோஇருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!//
கண்ணீர் கவிதைதான்...இருந்தாலும் எனக்குப் பிடித்தது..
அன்புடன் அருணா
//நித்யகுமாரன் said...
\\ எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோஇருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்! \\
மௌனத்தின் சப்தங்கள் மிகக் கொடுமையானவை சதீஷ்...
//
வாருங்கள் நித்யா... :)
தருகைக்கு மிக்க நன்றி
// கார்த்திக் said...
//எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோ
இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!//
இசை ஞானியின் எனக்கு பிடித்த சில வரிகள் :
மௌனங்கள் வார்த்தைகளை விட அர்த்தமுள்ளவை.
என் மௌனங்களையே உன்னால் புரிந்துகொள்ளமுடியாவிட்டால்
என் வார்த்தைகளை என்கிறிந்து புரிந்துகொள்ளப்போகிறாய்
//இருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்//
அருமை சதீஷ்
//
வரிகள் அருமை :))
பாராட்டிற்கு நன்றி கார்த்திக்!
//நிவிஷா..... said...
எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோஇருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!\\
Nice lines Sathish,
sogathai pilinjiteenga:)
Natpudan
Nivisha.
//
வாங்க நட்பே!
பிழியயெல்லாம் இல்லீங்க :)
நன்றி நிவிஷா!
//ஸ்ரீ said...
அழகான கண்ணீர், கணமான கவிதை சூப்பர்
//
நன்றி ஸ்ரீ :))
தங்களின் வரிகளை விடவா!!
//aruna said...
//எதுவாகிலும் இன்று தொலைந்து போனதோஇருவருக்குமிடையே வார்த்தைகளற்ற மௌனங்கள்!//
கண்ணீர் கவிதைதான்...இருந்தாலும் எனக்குப் பிடித்தது..
அன்புடன் அருணா
//
வரிகள் பிடித்ததா!!
மிக்க நன்றி அருணா :)
சதிஷ்,
உங்கள் கவிதைகள் மிண்டும் மிண்டும் என்னை படிக்க துண்டுகிறது... ஏன்னென்றால் கவிதைகளில் அவ்வளவு அழமான அழகான உணர்வுகள்... என் முதல் கருத்தில் சொன்னதை மிண்டும் சொல்கிறேன்... உங்கள் எழுத்தை மிகவும் எதிர்நோக்குகிறேன்...

ஆஹா!! ரோம்ப புகழ்றீங்களே :))
என் எழுத்துக்களை நீங்கள் எதிர்நோக்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது தினேஷ் :)
இன்னும் கவனமாக எழுதும் கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது!!
//கேள்விகளுக்கு உயிரில்லை என்றாள்
இறந்த அவைகளை நான்
இறக்கும்வரை சுமக்கவைத்தாள்//
வலி மிகுந்த வார்த்தைகள்
asathal kavithaikal ellam
rahini
கருத்துரையிடுக