ஞாயிறு, பிப்ரவரி 03, 2008

காற்றில் ஓர் கவிதை!

'
சின்னாபின்னமான கட்டிடங்கள்
சிதறிகிடக்கும் துகள்கள்
எங்கும் தெரிக்கும் குருதிகள்
காதை பிளக்கும் ஓசைகள்

நடக்க எப்போதோ மறந்துபோய்
நில்லா ஓட்டத்தில் என் கால்கள்

தாய்மண்ணின் மானம்காக்க
நான் மௌனம் கலைந்தேன்
இங்கே வீரனெனும் மூடியனிந்தேன்
'
காரணங்கள் நான் அறியேன்
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்

சிதறிய துகள்களில் தாவிவிரைந்தேன்
பதறிய என்னுள்ளத்தை ஆற்றதுடித்தேன்
இடரிய முகங்களை கொன்றுகுவித்தேன்

பறக்கும் தோட்டாக்கள் என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்

உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!

ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று

பெற்றவரிடம் போய் சொல்
உன்பிள்ளை ஊருக்காக உயிர்தந்து
பெருமை சேர்த்தவனென்று

என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று

என்மைந்தனிடம் போய் சொல்
உன்தந்தை உனக்கு கற்றுதந்தது
வாழ்விலென்றும் துணிச்சலென்று

விரல்கள் அசையமறுக்க
கண்களில் பார்வைமங்க
எஞ்சிய என்னுயிர் கொண்டு
காற்றில் ஓர் கவிதை வறைகிறேன்
தென்றலே அதை நீ சற்று
சேருமிடம் சேர்ப்பாயோ!

23 கருத்துகள்:

Dreamzz சொன்னது…

வாவ்! யுத்தங்கள் அர்த்தமில்ல்லாதது.
என்பதை
//காரணங்கள் நான் அறியேன்
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்க துனிந்தேன்//

நச்சுனு சொல்லறீங்க!

Dreamzz சொன்னது…

//என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று
//

//விரல்கள் அசையமறுக்க
கண்களில் பார்வைமங்க
எஞ்சிய என்னுயிர் கொண்டு
காற்றில் ஓர் கவிதை வறைகிறேன்
தென்றலே அதை நீ சற்றுசேருமிடம் சேர்ப்பாயோ!//
சூப்பர்.. நல்ல வரிகள் :)

நிவிஷா..... சொன்னது…

nice lines sathish!

//உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!//
nice

natpodu
nivisha

வினையூக்கி சொன்னது…

@உயிர்குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்

போரின் வன்மத்தை இதை விட எளிமையாகக் காட்ட இயலாது.

பாசம், காதல், வீரம் அர்ப்பணிப்பு என அனைத்தும் ஒரு சேர அருமையாக இருக்கு.

பெயரில்லா சொன்னது…

வாரே வாவ்!
நாட்டுக்காக அர்பணித்த வீரனின் முழக்கம்.....ரொம்ப, ரொம்ப அருமையா எழுதியிருக்கிறீங்க சதீஷ்.

பெயரில்லா சொன்னது…

ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று

பேற்றவரிடம் போய் சொல்
உன்பிள்ளை ஊருக்காக உயிர்தந்து
பெருமை சேர்த்தவனென்று

என்னவளிடம் போய் சொல்
உன்னவன் உனக்காக சேர்த்தது
களத்தில் சிகப்பு பூக்களென்று

என்மைந்தனிடம் போய் சொல்
உன்தந்தை உனக்கு கற்றுதந்தது
வாழ்விலென்றும் துணிச்சலென்று\\

இந்த வரிகள்.....அழகாக பிரதிபலிக்கின்றது உணர்வுகளை.

[பேற்றவரிடம்-> பெற்றவரிடம் ....எழுத்துப்பிழையோ??]

திவ்யா.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@Dreamzz said...
வாவ்! யுத்தங்கள் அர்த்தமில்ல்லாதது.
என்பதை
//காரணங்கள் நான் அறியேன்
அது ஆள்பவர்களின் கவலை
உயிர் குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்க துனிந்தேன்//

நச்சுனு சொல்லறீங்க!
//

வாங்க Dreamzz!!
வரிகள் பிடிச்சிருந்ததா?? வாழ்த்துக்களுக்கு நன்றி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// நிவிஷா..... said...
nice lines sathish!

//உனக்காய் என்பணி நான் செய்தேன்
எனக்காய் நாடே ஒன்று செய்வாயோ!//
nice

natpodu
nivisha
//

என் பதிவேட்டிற்கு உங்களை வரவேற்கிறேன் நிவிஷா!

உங்கள் நட்பிற்கு நன்றி :))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ வினையூக்கி said...
@உயிர்குடிக்க வந்தேன்
என்னுயிர் துறக்கத் துனிந்தேன்

போரின் வன்மத்தை இதை விட எளிமையாகக் காட்ட இயலாது.

பாசம், காதல், வீரம் அர்ப்பணிப்பு என அனைத்தும் ஒரு சேர அருமையாக இருக்கு.
//

உங்களின் பாரட்டுக்கள் கிடைத்ததில் மிக்கமகிழ்ச்சி!! தங்களின் வரவை நான் எதிர்பார்க்கவில்லை!!

மிக்க நன்றி வினையூக்கி அவர்களே!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@திவ்யா said...
வாரே வாவ்!
நாட்டுக்காக அர்பணித்த வீரனின் முழக்கம்.....ரொம்ப, ரொம்ப அருமையா எழுதியிருக்கிறீங்க சதீஷ்.
//

மிக்க நன்றி திவ்யா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ Anonymous said...

[பேற்றவரிடம்-> பெற்றவரிடம் ....எழுத்துப்பிழையோ??]

திவ்யா.
//

பிழையை காட்டியமைக்கு நன்றி திவ்யா!

என்ன திவ்யா திடீர்னு anonymous ஆஹிடீங்க?? இல்ல anonymous திவ்யா ஆஹிடாங்களா!!

பெயரில்லா சொன்னது…

\\ sathish said...
//@ Anonymous said...

[பேற்றவரிடம்-> பெற்றவரிடம் ....எழுத்துப்பிழையோ??]

திவ்யா.
//

பிழையை காட்டியமைக்கு நன்றி திவ்யா!

என்ன திவ்யா திடீர்னு anonymous ஆஹிடீங்க?? இல்ல anonymous திவ்யா ஆஹிடாங்களா!!\\

blogger la login panala,so apdi oru anony comment potutein!

Divya.

Jeevan சொன்னது…

//பறக்கும் தோட்டா என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்//
Pain in the lines
War never gains
Blood is red,
Is the sign that nothing separates us.

Wonderful writing Sathish!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

மற்றுமொரு பரிமாணத்தில் பார்க்கிறேன் உங்கள் கவிதை சதீஷ்... தோட்டாக்களின் சத்தம் கவிதையில் தெரிக்கின்றது...
வரிகளின் வலிகள் நிஜம் உணர்த்துகின்றது.....

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//@ நவீன் ப்ரகாஷ் said...
மற்றுமொரு பரிமாணத்தில் பார்க்கிறேன் உங்கள் கவிதை சதீஷ்... தோட்டாக்களின் சத்தம் கவிதையில் தெரிக்கின்றது...
வரிகளின் வலிகள் நிஜம் உணர்த்துகின்றது.....
//

வாங்க நவீன்!! இன்னொறு பரிமாணமா??? ரொம்ப நன்றி :)))

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

\\@Jeevan said...
//பறக்கும் தோட்டா என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்//
Pain in the lines
War never gains
Blood is red,
Is the sign that nothing separates us.

Wonderful writing Sathish!
\\

வாங்க ஜீவன்!! தங்களின் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி :)) உங்களின் வரிகளும் அழகு!!

தினேஷ் சொன்னது…

Sathish,

//பறக்கும் தோட்டாக்கள் என்மார்பை பிளக்க
இதயம் இதற்குமேல் துடிக்க மறுக்க
என்கால்கள் கூட நிலைகொண்டுவீழ
வீழ்ந்துகிடக்கிறேன் புழுதியில்
மூழ்கிக்கிடக்கிறேன் என்குருதியில்//

எல்லாமே மிகமிக ஆழமான வரிகள், ஓவ்வொரு வார்த்தையும் உணர்த்துகின்ற உணர்வுகள் வலிகள் அருமை அருமை... வாய்ப்பு கிடைக்கும் போதுதெல்லாம் நிறைய எழுதுங்கள்...

தினேஷ்

நித்யன் சொன்னது…

போரின் வலியை அழகாய் சித்தரிக்கின்றன உங்கள் வரிகள்...

பிரமாதம்.

உயிர் துறக்கும் வேளையில் நினைவில் வரும் சொந்தங்களின் நினைவுகள் தவிர்க்க இயலாதவை.

அந்த வெளிப்பாடு வலிகள் நிறைந்தது. உங்கள் வரிகள் அதைச்சரியாக பிரதிபலிக்கின்றன.

காஞ்சனை சொன்னது…

'காற்றில் ஓர் கவிதை' மனம் தொட்டது.

//ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று//

அருமை. நல்வரிகள்.
எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

- சகாரா

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// நித்யகுமாரன் said...
போரின் வலியை அழகாய் சித்தரிக்கின்றன உங்கள் வரிகள்...

பிரமாதம்.

உயிர் துறக்கும் வேளையில் நினைவில் வரும் சொந்தங்களின் நினைவுகள் தவிர்க்க இயலாதவை.

அந்த வெளிப்பாடு வலிகள் நிறைந்தது. உங்கள் வரிகள் அதைச்சரியாக பிரதிபலிக்கின்றன.
//
வாருங்கள் நித்யாகுமாரன்! தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// சகாரா said...
'காற்றில் ஓர் கவிதை' மனம் தொட்டது.

//ஈன்றவளிடம் போய் சொல்
உன்மகன் தாய்க்குத்தாயான
நாட்டின் மானம் காத்தவனேன்று//

அருமை. நல்வரிகள்.
எழுத்துப் பிழைகளைக் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

- சகாரா
//
வாங்க சகாரா :) வரிகள் மனம் தொட்டதா! மிக்க நன்றி!!

பிழைகளை கவணித்துக்கொண்டுதான் இருக்கிறேன் இருந்தும் தவறுகள் நேர்ந்துவிடுகிறது போலும்!!

supni சொன்னது…

Por veeran kavithai- Arumai.....

விஜய் சொன்னது…

மரண வேதனையில் இருக்கும் ஒவ்வொரு வீரனின் உணர்வுகளும் உங்கள் எழுத்துக்களில் உயிராய்...

அருமை அருமை.