ஈன்றவளின் குறலின்றி கண்ணயர்ந்ததில்லை
இன்றோ தொலைபேசியை எடுக்க
டாலரை கணக்கிடும் மனம்!
பெற்றவரை தொலைவில் விட்டு
இங்கே சில கனவுகளில்
கடல்கடக்கும் சகோதரனுக்காய்
வேலை பலுவின் மத்தியிலும்
'ஷாப்பிங்' செய்த அண்ணன்
உறவுகளை கடந்து வந்து
இங்கே சில கனவுகளில்
பிரியும் தினம் அறிந்த போதிலும்
மீண்டும் மீண்டும் கேட்கும் அறைநண்பர்கள்
நண்பர்களின் அரவணைப்பை தாண்டி
இங்கே சில கனவுகளில்
விருந்துகள் கொடுத்து மகிழ்ந்தாலும்
உலாபேசியில் பூரித்தாலும்
உள்ளார்ந்த பயம்தனை காணத்தவறா தோழமை!
தயக்கங்களை மூட்டைகட்டி
இங்கே சில கனவுகளில்
நண்பர்கள் வழியனுப்ப,
முகம் தெரியா தோழி
வாழ்த்துக்கள் கூரியனுப்ப,
ஈரப்புன்னகைகள் சுமந்தபடி
இங்கே சில கனவுகளில்
உறவுகளிடம் சொல்லிவிட்டு
உரிமைகளிடம் சற்றுகலங்கிவிட்டு
கண்டங்கள் கடந்துவந்து,
அழகாய் புன்னகைக்கும் சிகப்பு மனிதர்களின்
மத்தியில் வியப்பாய் வியக்கிறேன்
தாய்தேசத்தை நினைவில் விட்டு
பூமிபந்தில் பாதிதூரம் கடந்திந்த
டாலர் தேசத்தில் கேளாமலே தொடர்கிறது
எனதிந்த டாலர் கனவுகள்.....
6 கருத்துகள்:
தாய் நாட்டை விட்டு, பெற்றெடுத்தவர்களையும் உறவுகளையும் நண்பர்களையும் விட்டு விட்டு......
அயல் நாட்டில் வாழும் மனிதனின் மன ஏக்கங்கள், உணர்ச்சிகள்......ஒவ்வொரு வரியிலும் மிக அழகாக, தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்,
பாராட்டுக்கள்!!
உங்கள் உள்ளுணர்வை நன்றாக கவிதைகளில் வெளிப்படுத்தி இருக்கிறிர்கள்...
தினேஷ்
கவிதைகள் நன்றாயிருக்கின்றன சதீஷ்.. எழுத்துப்பிழைகள் மிகுதி.. தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.. வாழ்த்துக்கள்.
கடல் கடந்து திரவியம் தேட சென்றவனின் தவிப்பினை ஒவ்வொரு வரிகளும் பிரதிபலிக்கின்றன.
மிக அழகான நடை உங்கள் கவிகளில் கண்டேன், வாழ்த்துக்கள்.
வலி சுமந்த கனவுகள்.
- சகாரா.
//
@சகாரா
வலி சுமந்த கனவுகள்.
//
வாருங்கள் சகாரா!
முதல்முறையாய் வந்திரூக்கீங்க. உங்களோட மறுமொழிக்கு ரொம்ப நன்றி
கருத்துரையிடுக