சனி, டிசம்பர் 02, 2006

துளிகள் II

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இல்லை

கற்பனைகள் மட்டுமே
கவிதைகளில் வருமாயின்
எங்களின் வார்த்தைகளில்
கனவுகள் இல்லை...

அனுபவங்கள் மட்டுமே
கவிதைகளாகுமாயின்
எங்களின் வரிகளில்
நிகழ்வுகள் இல்லை...

காதல் செய்தால் மட்டுமே
கவிதைகள் தோன்றுமாயின்
எங்களின் எழுத்துக்களில்
காதல் இல்லை...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வருவதில்லை

சூழும் பனியை தீ மூட்டி சுட்டபோது
தொலைவில் நடுங்கும் நாய்குட்டியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

இலையில் கசிந்த பனிநீரை ருசித்தபோது

மலர துடித்து பனியில் உறைந்த மொட்டை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

சொகுசு பேருந்தில் சொகுசாய் பயணிக்கும்போது

ஜன்னலின் அருகே கையேந்தும் சிருமியை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !

நிஜமொன்று இருக்கும்
போதும்
நிழல் மட்டும் சொந்தமாவதை பற்றி
கவிதை எழுத வருவதில்லை !


எனக்கு ஒரு கவிதை எழுத வருவதில்லை !

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அவள்

அவள் - தூரும் மழையின் சாரலை
ஜன்னலோரமாய் இரசிக்க வைத்தவள்

அவள் - வானவில்லின் வண்ணங்களில்
என்னை ஓவியம் தீட்டவைத்தவள்

அவள் - என் தாய்மொழியில்
என்னை கவிஞனாக்கியவள்

அவள் - பூக்களின் மேல் என்னை
சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியாக்கியவள்

அவள் - காரணங்களின்றி என்னை
புன்னகை சிந்த வைத்தவள்

அவள் - பூவின் இதழ்களை வருடக்கூட
எனக்குள் பயம் கொடுத்தவள்

அவள் - பின்னொரு மாலையில் கண்களை
வற்றா நீர்தேக்கமாக்கிப்போனவள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தூரல் தூவும்...

4 கருத்துகள்:

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//அவள் - காரணங்களின்றி என்னை
புன்னகை சிந்த வைத்தவள்//

காதல் புன்னகைக்கிறதா சதீஷ் ?

:)))

தினேஷ் சொன்னது…

கண்ணிரில் எழுதிய கவிதையானதால், எழுத்துக்களால் எழுத முடியவில்லை மறுமொழியை மன்னிக்கவும்...

தினேஷ்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
//அவள் - காரணங்களின்றி என்னை
புன்னகை சிந்த வைத்தவள்//

காதல் புன்னகைக்கிறதா சதீஷ் ?

:)))
//

புன்னகைக்கும் என்ற கற்பனை தான்! :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கண்ணிரில் எழுதிய கவிதையானதால், எழுத்துக்களால் எழுத முடியவில்லை மறுமொழியை மன்னிக்கவும்...

தினேஷ்//

மன்னித்தேன் :)
நன்றி தினேஷ்!