வியாழன், ஆகஸ்ட் 24, 2006

புன்னகைகள்

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கையிலேந்தி
உலாவியபோது
சட்டென்று
கழுத்தைப்பற்றி
கன்னத்தில் முத்தமிட்ட
மழலை...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தீபாவளி இரவில்
வெடிகள் தீர்ந்துபோக
வெடிக்கமறுத்திருந்த
வெடிகளின் மருந்துகளில்
சொக்கபானம் வைத்து
வேடிக்கை காட்டிய
அண்ணன்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

விலகிச்செல்லும்
இரயிலின் வாசலோரமாய்
மோழியாத வார்த்தைகளை
வெல்லுமாறு கண்ணீர்
கலந்த புன்னகையுடன்
கடைசியாய்
கையசைத்த அவள்...


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

- தொடரும்...

2 கருத்துகள்:

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கையிலேந்தி
உலாவியபோது
சட்டென்று
கழுத்தைப்பற்றி
கன்னத்தில் முத்தமிட்ட
மழலை...//

அட ... சொல்ல வைத்த
கவிதை ...
புன்னகை தேன்...:))))

Divya சொன்னது…

\\விலகிச்செல்லும்
இரயிலின் வாசலோரமாய்
மோழியாத வார்த்தைகளை
வெல்லுமாறு கண்ணீர்
கலந்த புன்னகையுடன்
கடைசியாய்
கையசைத்த அவள்...\

அழுத்தமான வரிகள்!
அருமை சதீஷ்!