வசந்தத்தில் ஓர் நாள் அது
கிளிகள் கூட்டை தேடும் தருணமது
இருளுக்கு ஒளி வழிவிடும் பொழுது அது
சப்தங்களை மௌனம் கௌவும் நேரமது
சூழும் இருளை பரவும் அமைதியை,
ஒளி ஒலியால் கிழிக்கும் வாகனங்கள்
எப்போழுதாவது கடக்கும் ஒற்றை
சாலைதன் ஓரமாய் என் மெய்
வழியில் வரும் தென்றலதை மேனி தழுவ
எதிரில் வரும் மேகமதை தேகம் கொள்ள
நானும் என் தனிமையும் கைகோர்த்து
ஓர் நடை பயணதில்
தோற்றமென்பது இருந்ததில்லை
இறுதியென்பது இருப்பதில்லை
ஆரம்பங்களும் முடிவுகளும்
கிளிகள் கூட்டை தேடும் தருணமது
இருளுக்கு ஒளி வழிவிடும் பொழுது அது
சப்தங்களை மௌனம் கௌவும் நேரமது
சூழும் இருளை பரவும் அமைதியை,
ஒளி ஒலியால் கிழிக்கும் வாகனங்கள்
எப்போழுதாவது கடக்கும் ஒற்றை
சாலைதன் ஓரமாய் என் மெய்
வழியில் வரும் தென்றலதை மேனி தழுவ
எதிரில் வரும் மேகமதை தேகம் கொள்ள
நானும் என் தனிமையும் கைகோர்த்து
ஓர் நடை பயணதில்
தோற்றமென்பது இருந்ததில்லை
இறுதியென்பது இருப்பதில்லை
ஆரம்பங்களும் முடிவுகளும்
மட்டும் ஏராளம்
துளியில் கைதாகி நிற்கின்றோம்
அதுவே ஆரம்பத்தின் விதையானது
கருவறையை முழுதும் உணராமல்
பயணத்தின் இப்பகுதியில் ஆர்த்தமில்லை
உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்
லீலைகளில் இத்தோற்றமின்றி
துளியில் கைதாகி நிற்கின்றோம்
அதுவே ஆரம்பத்தின் விதையானது
கருவறையை முழுதும் உணராமல்
பயணத்தின் இப்பகுதியில் ஆர்த்தமில்லை
உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்
லீலைகளில் இத்தோற்றமின்றி
இறையில் ஏது அர்த்தம்
பயணத்தில் இப்பகுதியின்றி
பயணத்தில் இப்பகுதியின்றி
பயணத்தில் ஏது அர்த்தம்
ஒற்றைசாலை திருப்பம் காண
பச்சை போர்வை போர்த்திய
அழகிய கானகம் காத்திருக்கிறது
பயணம் இன்னும் முடியவில்லை
அமைதி வனத்தில் அது தொடர
அதனூடே யோசித்து பார்க்கிறேன்
நீயும் யோசித்துவை தோழா
நமது இந்த பயணம் தான்
என்றும் முடிவதே இல்லையே...
ஒற்றைசாலை திருப்பம் காண
பச்சை போர்வை போர்த்திய
அழகிய கானகம் காத்திருக்கிறது
பயணம் இன்னும் முடியவில்லை
அமைதி வனத்தில் அது தொடர
அதனூடே யோசித்து பார்க்கிறேன்
நீயும் யோசித்துவை தோழா
நமது இந்த பயணம் தான்
என்றும் முடிவதே இல்லையே...
2 கருத்துகள்:
தனிமையுடன் தோழமைக் கொண்டு எழுதிய வரிகள் அனைத்தும் அருமை.
[ முதல் முறை படித்த போது எனக்கு சில வரிகளின் அர்த்தம் புரியவில்லை, மீண்டும் ஒரு முறை இன்று படித்தேன்......விளங்கியது அர்த்தம்]
\\உருயின்றி சுற்றிதிரிந்தோம்
உருகொண்டு தத்தளிக்கின்றோம்
உருயின்றி முக்தி பெருவோம்\
மனிதனின் முழு வாழ்க்கையையுமே இம்மூன்று வரிகளிலும் அடக்கிவிட்டீர்களே....அசந்தல்!
என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!
கருத்துரையிடுக