வெள்ளி, மே 04, 2007

உனக்கு பிறகான நாட்களில்...


அன்பே நாட்கள்
நகரத்தான் செய்கின்றன

நீ இல்லை இருந்தும் ஆதவன்
தினமும் உதிக்கத்தான் செய்கின்றது

உன் ஓளியின்றி

நீ சென்ற பின்னறும் பௌர்னமி
மாதமொருமுறை ஒளிரத்தான் செய்கின்றது

உன் குளிர்ச்சியின்றி

நீ கடந்துவிட்ட பிறகும் மலர்கள்

தினமும் மலரத்தான் செய்கின்றன
உன் வாசமின்றி
'
நினைவுகள் பூங்காயிருக்கையில் தேங்கிக்கிடக்கின்றன
தொடர்ந்து தேங்கத்தான் செய்கின்றன

உன் சுவாசமின்றி

பயத்திற்க்கு யதார்த்தத்தை காரணம் சொன்னாய்
தைரியயதார்த்தங்கள் நிகழத்தான் செய்கின்றன
உன் பார்வையின்றி


நம்பிக்கை விடுத்து உறவை துறந்தாய்
நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கின்றன
உன் வார்த்தையின்றி

'
அடைந்தவர் கூறலாம் கதைகள்
இழந்தவர் எழுதலாம் கவிதைகள்
எழுத்துக்கள் தொடரத்தான் செய்கின்றன
உன் சொற்களின்றி

'உன்னோட நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே'
- வரிகள் உண்மைதான், மரணங்கள் தினமும்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன
உன் அருகாமையின்றி
'
யதார்த்தமே முதல்முக்கியம்
பாடம் சொல்லிப்போனாய்

நேற்றைய இழப்புகள்
இன்றைக்கான பதில்கள்...
இன்றைய குழப்பங்கள்
நாளைக்கான புன்னகைகள்...

யதார்த்தம் இதுதானே
யதார்த்தத்தை காதலிக்கிறேன்
நான் காதலை காதலிக்கிறேன்

கண்களில் காதலை தோற்றுவிதவளின்
கண்களில் தோன்றிய காதல்
நமக்கன்று எனும்போது
இருள்சூளத்தான் செய்கின்றது
இருந்தும் காட்சிகள் தொடரத்தான் செய்கின்றன
உன்பிம்பம் தவிர வேறன்றி


உறைந்துவிடவில்லை காலத்தின் வேகத்தில்
நொடிகளை காதலிக்கிறேன்

பகலின் பின்தோன்றிய
இரவினும் பின்தோன்றும்

விடியலை நோக்கியிருக்கிறேன்


எதுவாகிலும் அன்பே,
இங்கே நாட்கள் நகரத்தான் செய்கின்றன...

10 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

yaruda antha frends????

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

தலைப்பே கவிதை சதீஷ் :)))

சுகமான நினைவுச்சுமைகள்
அருமை...


//கண்களில் காதலை தோற்றுவிதவளின்
கண்களில் தோன்றிய காதல்
நமக்கன்று எனும்போது
இருள்சூளத்தான் செய்கின்றது//

பிறகான நாட்கள்
பிறக்காமலே இருந்திருக்கலாமோ?

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

நன்றி நவீன். நாட்கள் பிறவாதிருந்திருந்தால் வார்தைகள் பிறவாதுபோயிருக்குமோ!

JC Nithya சொன்னது…

வலிகள் வார்த்தையாகும் போதெல்லாம்
இனிய கவிதை பிறக்கிறது.

ஒரு சில எழுத்துப் பிழைகளை மட்டும்
நீக்கி விட்டு பார்த்தால்,

மிக அழகான ஒரு கவிதை!
அதை விட அழகான தலைப்பு!

Divya சொன்னது…

\\நேற்றைய இழப்புகள்
இன்றைக்கான பதில்கள்...
இன்றைய குழப்பங்கள்
நாளைக்கான புன்னகைகள்...\\

ரசித்தேன் இந்த வரிகளை,

ரொம்ப அருமையாக கவிதை எழுதுகிறீர்கள்......தொடரட்டும் உங்கள் கவி பயணம்!!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஒரு சில எழுத்துப் பிழைகளை மட்டும்
நீக்கி விட்டு பார்த்தால்,

மிக அழகான ஒரு கவிதை!
அதை விட அழகான தலைப்பு!//

நன்றி நித்யா. தங்களின் வருகையால் மகிழ்ந்தேன். நிச்சயம் எழுத்துக்களில் இன்னும் கவனம் செலுத்துகிறேன்.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

@ Divya said...
//ரொம்ப அருமையாக கவிதை எழுதுகிறீர்கள்......தொடரட்டும் உங்கள் கவி பயணம்!!//

அருமையாக எழுதுவதாக தாங்கள் கூறுவதை ஏற்பதற்க்கான தகுதி என் எழுத்துக்களுக்கு இருப்பதாய் நான் நினைக்கவில்லை (இருந்தாலும் கொஞ்சம் வசனநடையாக எழுதுவதாய் நினைகிறேன் :))
தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

// JC Nithya said... வலிகள் வார்த்தையாகும் போதெல்லாம்
இனிய கவிதை பிறக்கிறது. //

உண்மை தான் நித்யா. ஆனால் இதில் வலிகள் என்னுடையது அல்ல வார்த்தைகள் மட்டுமே என்னுடையது! :)

JC Nithya சொன்னது…

எழுத்துப் பிழைகள் என குறிப்பிட்டது
தட்டச்சு பிழைகளை... (typo)

மற்றபடி உங்கள் எழுத்தில் எந்த பிழையும் இல்லை Sathish :)

Rasiga சொன்னது…

உங்கள் வலைத்தளத்தில் இந்த கவிதை எப்படி என் கண்ணில் படாமல் தவறியது......

சுட்டி அளித்தமைக்கு நன்றி சதீஷ்.

காதல் நினைவுகள் ஒரு சுகமான சுமை.

காதல் தந்த வலியின் வெளிப்பாடான ஒவ்வொரு வரிகளும் அருமை.