வெள்ளி, டிசம்பர் 08, 2006

வெளி


அந்த அழகிய இயற்கை அன்னையின் மடியில்
இதோ நான்...

தென்றலின் நாதமதற்கு இசை பாடும்
குயிலின் கீதமதற்கு நடனமாடும்
புல்லின் மெத்தை தனில் இதோ நான்...

வியக்கிறேன் அந்த படைப்பை அதன் படைப்பாளியை
அந்த தோற்றத்தை அதை தோற்றுவித்தவனை
அந்த கவிதையை அதன் கவிஞனை
அந்த அழகை அதை கொண்ட அந்த வெளியை...

கவிஞனே உன் முகம் காட்டு
உன் கவிதையின் முழு பொருள் காட்டு
படைப்பாளியே உன் தோற்றம் கூறு
உன் படைப்பின் முழு தேற்றம் கூறு

விடையின்றி தவிக்கிறோம்
கேள்விகளுக்கு விடையாக கேள்விகளே கிட்ட
இன்னும் தேடுகிறோம்...

வியக்கிறோம் அந்த விண்வெளியை
அதில் பயனிக்கும் மண்டலங்களை
அதில் சுற்றும் குடும்பங்களை
அதில் உலாவும் கோள்களை
அதில் உறையும் ஜீவன்களை
அத்தனையும் எத்துனை அழகு!

கவிதை தந்த பரம்பொருளே
உன் பிறப்பை தேடுகின்றோம்
கவிதைக்கு வடிவம் தந்த பிரம்மமே
உன் வடிவம் தேடுகின்றோம்
கவிதைக்கு பொருள் கொடுத்த முழுமுதர்பொருளே
உன் பொருள் தேடுகின்றோம்

அனைத்துக்கும் விதிகளை விதித்தவனே
அந்த விதிகளின் விதியை தேடுகின்றோம்
அந்த விதிக்கான தேற்றமதனை தேடுகின்றோம்

அந்த முழுதேற்றம் கண்டெடுப்போம்
அதுவரை நாங்கள்... தேடியிருப்போம்!

4 கருத்துகள்:

Divya சொன்னது…

\\கவிதை தந்த பரம்பொருளே
உன் பிறப்பை தேடுகின்றோம்
கவிதைக்கு வடிவம் தந்த பிரம்மமே
உன் வடிவம் தேடுகின்றோம்
கவிதைக்கு பொருள் கொடுத்த முழுமுதர்பொருளே
உன் பொருள் தேடுகின்றோம்\

எப்படி இவ்வளவு அழகா எழுத முடியுது உங்களால்,
இறைவனை தேடும் விதம் அருமை.

முழுமுதற்பொருள்-> இந்த வார்த்தையை மறுபடியும் மறுபடியும் படித்தேன், முதல் முறையாக இப்படி ஒரு அற்புதமான வார்த்தை என் பார்வையில்,

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//
@divya

எப்படி இவ்வளவு அழகா எழுத முடியுது உங்களால்,
இறைவனை தேடும் விதம் அருமை
//

அட! உங்களோட கதைகளை விடவா?? எவ்வளவு அழகாக கதைகள் சொல்றீங்க!! நானும் முயன்றிருகிறேன் கதைகள் எழுத :)) ஆனா சரியா work out ஆக மாடேங்குது! அந்த இரகசியத்தை கொஞ்சம் சொல்லுங்களேன் :)

சாம் தாத்தா சொன்னது…

சதீஷ் பேராண்டி,

உண்மையில்...

மனசு நொந்து வெந்து போயி சொல்றேன்...

ரொம்ப ரொம்ப நல்லாருக்குடா கண்ணு.

உன்னளவுக்கு சிந்திக்க என்னால் முடியவே முடியாது.

//அனைத்துக்கும் விதிகளை விதித்தவனே
அந்த விதிகளின் விதியை தேடுகின்றோம்
அந்த விதிக்கான தேற்றமதனை தேடுகின்றோம்//
அடா, அடா, என்ன ஒரு துணிச்சல், நம்பிக்கை.

//அந்த முழுதேற்றம் கண்டெடுப்போம்
அதுவரை நாங்கள்... தேடியிருப்போம்!//
இதில் நம்பிக்கையோடு விடா முயற்சி தெரிகிறது.

பேசாம இங்கேயே உன் கவிதை படிச்சுட்டே உக்காந்துடத் தோணுது.
அந்த விதிகளின் விதி....
நம்முள்ளேயே இருக்கு.
நிச்சயம் கண்டுபிடிப்போம் பேராண்டி.
வாழ்த்துக்கள்.
(கடவுளைக் குறித்த இந்த மாதிரியான விஷயங்கள் படிக்கையில்...
என்னவோ ஒரு கிக் ஏற்படுதுடா பேராண்டி )

CVR சொன்னது…

:)
என்னைப்போல இன்னும் எத்தனை பேரோ!
நல்ல கவிதை!! :-)