
கவிதைகளில் இது அரிது,
கனவுகளில் இது புதிது,
நினைவுகளில் இது இனிது,
நிகழ்வுகளில் இது அழகு,
வரிகளில் இது கடிது,
உணர்வுகளில் இது மிருது,
பதிவுகளில் இது வடிவு,
கற்பனைகளில் இது பெரிது,
மெய்களில் இது வலிது...
இறந்துபோன காலம் அது எனது,
கடந்துபோகும் காலம் இது உனது,
இனிவரும் காலம்... அது நமது!