
வழிந்து நிற்கும் கனவுகளை
தலையனை வழியே
ஒழுகவிட்டு விழிக்கிறேன்
சன்னல் திறைவிலக்கி
கதிரவனின் ஒளிகொண்டு
அறையில் நிரம்பியிருக்கும்
இருள் துடைத்தெடுக்கிறேன்
ஆதவனின் கரம்பட்டு
மலரும் பூக்கள்
வாடையற்றுகிடக்கும் காற்றை
மணம்வீசும் தென்றலாய் மாற்ற
புன்னகைக்கிறேன்
இமைக்கும் பொழுதில்
நிகழ்ந்து போகும் நிகழ்வுகள்
வெற்றிரவுகளில் இமைகளுக்குள்
வந்து வழிந்து நிற்கின்றன
சில நினைவுகள் இப்படித்தான்
சில நிகழ்வுகள் இப்படித்தான்
சில கனவுகள் இப்படித்தான்
இமைதட்டும் சிறுநொடிக்குள்
இதழ்மலர்ந்து மறைகின்றன...