
வடிவமைத்த எழுத்துக்கள்
கோர்த்தமைத்த வார்த்தைகள்
சேர்ந்தமைத்த வரிகள்
நிரம்பமைந்த கவிதை
சுமந்த வெள்ளைத்தாள்
தாங்கிய தென்றலில்
படரும் சுகந்தத்தை
உரிமைகொண்டாடும் மலர்கள்
ஏந்திய முன்பனிகளை
செங்கதிரால் மெல்ல உருக்கும்
அதிகாலை ஆதவனின்
அழகிய உதயம் கண்டு
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...