ஞாயிறு, செப்டம்பர் 26, 2021
புதன், பிப்ரவரி 06, 2019
முதல் குறும்புதினம்!
எனது முதல் கதை eBook வடிவில் Amazon தளத்தில்!
https://www.amazon.in/dp/B07NCH1MRQ
இந்தியாவிற்கு வெளியே இருக்கும் அன்பர்கள் அவரவர் பகுதியிலுள்ள Amazon தளத்தில் 'பேழை' அல்லது 'pezhai' என தேடலாம்
https://www.amazon.com/dp/B07NCH1MRQ
தவறாமல் தங்களின் விமர்சனங்களை Amazon தளத்தில் பதிவு செய்யவும். Amazon நடத்தும் 'Pen to Publish' போட்டியில் எனது இந்த நூல் இருக்கிறது அதனால் உங்களின் மதிப்பீடு அதற்கு பெரிதும் உதவும்! நன்றி!
வியாழன், மார்ச் 15, 2018
நல்லை அல்லை
நவிரம் துளைக்கும்
கதிர் மழை
ஞாயிறே நீ
நல்லை அல்லை
இணை சுடும்
வெயில் போர்வை
ஆதவனே நீ
நல்லை அல்லை
நல்இரவு குளிர்விரட்டி
தீம்பகல் புகுத்தும்
பகலவனே நீ
நல்லை அல்லை
துளி துளைத்து
வான்வில் வறையாய்
கதிரே நீ
நல்லை அல்லை
திங்கள், ஜூலை 11, 2016
இழப்போம்
பேராசை இழப்போம்
பெரும்ஆசை இழப்போம்
அசுரம் இழப்போம்
அறியாமை இழப்போம்
வாட்டம் இழப்போம்
வேதனை இழப்போம்
மிடிமை இழப்போம்
அடிமை இழப்போம்
அச்சம் இழப்போம்
நேர்எதிர்மை இழப்போம்
எல்லைகள் இழப்போம்
எதிரிகள் இழப்போம்
வறுமை இழப்போம்
இன்மை இழப்போம்
மாசு இழப்போம்
மடமை இழப்போம்
கயமை இழப்போம்
குழப்பம் இழப்போம்
வன்மம் இழப்போம்... தோழர்களே
நாம் துன்பம் இழப்போம்!
ஞாயிறு, அக்டோபர் 04, 2015
நம்பிக்கை
வேலியோ சரிந்தது
மேய்ந்தவரோ தீர்ப்பாளர்
நெருப்பிற்கு உடல் வார்த்தோம்
விடுதலைக்கு உயிர் வார்த்தோம்
விண்ணிடம் கேட்டோம்
மண்ணிடம் மன்றாடினோம்
விண்ணும் காக்கவில்லை
மண்ணும் மடுக்கவில்லை
தட்டினோம் ஞாலத்தின் கதவுகளை
திறந்தன சன்னல்கள் தடுப்புகளோடு
அறத்தினும் முக்கியமாம் புவிஅரசியல்
நியாயத்தினும் அவசியமாம் வாணிபம்
கனவுகளை சிதைத்தீர்
உரிமைகளை தடுத்தீர்
எத்தனை நாடகம்
எத்தனை ஏமாற்றம்
எத்தனை துரோகம்
எத்தனை வஞ்சகம்
இத்தனை கழிப்பிலும்
இத்தனை அழிப்பிலும்
இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது
எம் நம்பிக்கை... ஈழம்!
மேய்ந்தவரோ தீர்ப்பாளர்
நெருப்பிற்கு உடல் வார்த்தோம்
விடுதலைக்கு உயிர் வார்த்தோம்
விண்ணிடம் கேட்டோம்
மண்ணிடம் மன்றாடினோம்
விண்ணும் காக்கவில்லை
மண்ணும் மடுக்கவில்லை
தட்டினோம் ஞாலத்தின் கதவுகளை
திறந்தன சன்னல்கள் தடுப்புகளோடு
அறத்தினும் முக்கியமாம் புவிஅரசியல்
நியாயத்தினும் அவசியமாம் வாணிபம்
கனவுகளை சிதைத்தீர்
உரிமைகளை தடுத்தீர்
எத்தனை நாடகம்
எத்தனை ஏமாற்றம்
எத்தனை துரோகம்
எத்தனை வஞ்சகம்
இத்தனை கழிப்பிலும்
இத்தனை அழிப்பிலும்
இன்னும் கனன்றுகொண்டுதானிருக்கிறது
எம் நம்பிக்கை... ஈழம்!
புதன், மே 14, 2014
மழலை
அவன் உதிர்க்கும் புன்னகையில்
உதிர்ந்து போகின்றன
என் குழப்பங்கள்...
அவன் வீசும் பார்வையில்
வீசி எறியப்படுகின்றன
என் வலிகள்...
அவன் முறிக்கும் சோம்பலில்
முறிந்து போகின்றன
என் அயர்வுகள்...
உதிர்ந்து போகின்றன
என் குழப்பங்கள்...
அவன் வீசும் பார்வையில்
வீசி எறியப்படுகின்றன
என் வலிகள்...
அவன் முறிக்கும் சோம்பலில்
முறிந்து போகின்றன
என் அயர்வுகள்...
சனி, செப்டம்பர் 07, 2013
சனி, ஜனவரி 05, 2013
நவிரம்
வையகம் காத்திருக்கின்றது உன் பாதம் தாங்க
தென்றல் காத்திருக்கின்றது உன் சுவாசம் ஏந்த
வெளியது காத்திருகின்றது உன் ஆச்சர்யங்கள் சேர்க்க
இயலது காத்திருகின்றது உன் வியப்புகள் அடுக்க
பூக்கள் காத்திருகின்றன உன் வாசம் வீச
கவிதைகள் காத்திருக்கின்றன உன் வரிகள் ஏற்க
நிகழ்வுகள் காத்திருக்கின்றன உன் கனவுகள் சேர்க்க
கனவுகள் காத்திருக்கின்றன உன் காலங்கள் கோர்க்க
சிகரங்கள் காத்திருக்கின்றன நீ நவிரம் தொட
யாவரும் காத்திருக்கிறோம் மழலை உன் மெய் கான
சனி, ஜூலை 28, 2012
திங்கள், மே 09, 2011
புதன், ஜனவரி 12, 2011
நமது...
செவ்வாய், மே 25, 2010
நதி...

இருவேறு ஆறுகளாய்
பயணித்த வெள்ளம்
பயணித்த வெள்ளம்
ஒரே நதியாய்
இணையும் நன்நாளில்...
'
'தீதும் நன்றும்
பிறர்தர வாரா'
பிறர்தர வாரா'
'
தீதாய் நிற்கும் கற்களை
நதி அடித்துச்செல்லட்டும்
'
வழிமறிக்கும் பாறைகளை
நதி மோதித்தாண்டட்டும்
'
இடைவரும் மலைகளை
நதி விட்டுவிலகிச்செல்லட்டும்
'
நதி விட்டுவிலகிச்செல்லட்டும்
'
அரணாய் நிற்கும்
கரைகளாகும் பந்தங்களை
நதி சோலையாக்கித்தழுவட்டும்
'
இதுவே நதியாகிய
வாழ்க்கை பயணத்தின்
சாராம்சமாயாகட்டும்...
'
'
மணவாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கும் அருமை தோழமைக்காய்...
திங்கள், மார்ச் 29, 2010
நான்... அலை
வியாழன், நவம்பர் 19, 2009
பகடி
இருள்முகம் கொண்டு புதுநிலவு
கருமை போர்த்திய நீலவானில்
தவழும் இப்பொழுதில் பால்வீதி
கண்டு கிடக்கிறேன்...
முன்தின இரவின் கனவொன்றில்
வென்தாரிகை கருந்திரை கிழித்துவந்து
மறுஇரவில் கதைத்திருப்பதாய் உரைத்ததால்
வெளிகண்டு கிடக்கிறேன்...
அதோ அவள்! கீற்றாய் மறைந்தாள்
உதிக்கும்முன் கறைந்தது புன்னகை
அதோ அங்கே, இதோ இங்கே
அங்கிங்கெனாதபடி திரைகிழிசல்களாய் மிளிர்கிறாள்
அங்கிங்கெனாதபடி திரைகிழிசல்களாய் மிளிர்கிறாள்
அவள் லீலைகள் கண்டுவியக்கிறேன்!
அவள் களிகண்டு கிடக்கிறேன்,
அவள் வாக்கு வெறும் பகடி என்றறியாது...
'
'
P.S: சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த 'Leonoid' வின்கற்கள் பொழிவை எண்ணி கிறுக்கியது
புதன், மே 13, 2009
இலையுதிரா காலம்

முடிவற்ற கரைதனில்
மீய்ந்துகிடக்கும் அலைகளை
அள்ளி பருகுகிறேன்
தீர்வதாயில்லை தாகம்
கவிதைகள் சேகரித்த
காகிதங்கள் எரித்து
அனல் சேர்க்கிறேன்
காய்வதாயில்லை குளிர்
அரிமாவாய் வென்ற
இரைதனை காகமாய்
கொத்தி உன்கிறேன்
அடங்குவதாயில்லை பசி
ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!
வெள்ளி, மார்ச் 06, 2009
கனவுகள்
இமைகள் வழியே வழிந்து நிற்கும் கனவுகளை
தலையனை வழியே
ஒழுகவிட்டு விழிக்கிறேன்
சன்னல் திறைவிலக்கி
கதிரவனின் ஒளிகொண்டு
அறையில் நிரம்பியிருக்கும்
இருள் துடைத்தெடுக்கிறேன்
ஆதவனின் கரம்பட்டு
மலரும் பூக்கள்
வாடையற்றுகிடக்கும் காற்றை
மணம்வீசும் தென்றலாய் மாற்ற
புன்னகைக்கிறேன்
இமைக்கும் பொழுதில்
நிகழ்ந்து போகும் நிகழ்வுகள்
வெற்றிரவுகளில் இமைகளுக்குள்
வந்து வழிந்து நிற்கின்றன
சில நினைவுகள் இப்படித்தான்
சில நிகழ்வுகள் இப்படித்தான்
சில கனவுகள் இப்படித்தான்
இமைதட்டும் சிறுநொடிக்குள்
இதழ்மலர்ந்து மறைகின்றன...
புதன், ஜனவரி 07, 2009
இடைவெளி...

வடிவமைத்த எழுத்துக்கள்
கோர்த்தமைத்த வார்த்தைகள்
சேர்ந்தமைத்த வரிகள்
நிரம்பமைந்த கவிதை
சுமந்த வெள்ளைத்தாள்
தாங்கிய தென்றலில்
படரும் சுகந்தத்தை
உரிமைகொண்டாடும் மலர்கள்
ஏந்திய முன்பனிகளை
செங்கதிரால் மெல்ல உருக்கும்
அதிகாலை ஆதவனின்
அழகிய உதயம் கண்டு
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...
சனி, நவம்பர் 22, 2008
நிலவிற்கு ஓர் பயணம்!
சந்த்ரயான் (நிலவு ஊர்தி) வெற்றிகரமாய் அக்டோபர் 22, 2008 அன்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமதனால் விண்ணில் செலுத்தப்பட்டு, மேலும் Moon Impact Probe முலமாய் குழந்தைகள் தினமன்று திரு. அப்துல் கலாம் அவர்களின் யோசனைப்படி நம் தேசியகொடியை நிலவின் முகம்தனில் பதித்தாகிவிட்டது.
வெற்றிகரமாய் இதை சாதித்த இஸ்ரோவை தலைவணங்குகிறேன். இந்த முயற்சியை எண்ணி இரண்டு வருடங்கள் முன்பு பதிவிட்ட ஓர் பதிவை நான் நினைவுகொள்ள விரும்புகிறேன். மென்மேலும் சாதனைகள் தொடர ஆசைகொள்கிறேன்.
புதன், நவம்பர் 12, 2008
எதிர்பார்த்தல்
வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்
கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர
மணல் கூட்டில்
நித்திரை பயில்கிறேன்
நிறமிழந்து வண்ணம்கொண்ட
சருகுகள் சாலையோரமாய்
வரவுகளேற்க,
நொறுங்கும் ஒலிகளில்
வலிகள் தொலைக்கிறேன்
இறகினும்மெல்லிய தாள்
சுமந்துவந்த கவிதையில்
மனதின் அறைகள் கனக்க,
உறையும் நொடிகளில்
உருகுபனியாகிறேன்
இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!
ஞாயிறு, செப்டம்பர் 21, 2008
என்ன இல்லை?

என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர
என்ன இல்லை இங்கே
என் எண்ணம் தவிர
என்ன இல்லை இங்கே
என் அன்னைத் தவிர
என்ன இல்லை இங்கே
அந்த அன்பைத் தவிர
அந்த அன்பைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த கனவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நினைவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நொடியைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
என் கவிதைத் தவிர
என் கவிதைத் தவிர
என்ன இல்லை இங்கே
இந்த தனிமைத் தவிர
யாதுமாகி நீக்கமற
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர?
('லுக்காசுப்பி (கண்ணாமூச்சி)' எனும் 'இரங் தே பஸந்தி' பாடலின் பாதிப்பில் கிறுக்கியது. முக்கியமாக அதில் வரும் 'இங்கே அனைத்தும் இருக்கின்றன இருந்தும் தாயே உணருகின்றேன் நீயின்றி தனிமையாய்' என்ற வரிகள், சொல்லத்தேவையில்லை இரஹ்மானின் இசையில்!)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







