திங்கள், மார்ச் 29, 2010

நான்... அலை


யுகங்கள் பல கடந்துவந்தேன்,
தேடல் இன்னும் தொடர

தோன்றலும் கறைதலும்
மீண்டும் பிறத்தலும் பின்
மறைதலுமாய் காலனை
வென்றுவந்தேன், என்
தேடல் இன்னும் தொடர

பஞ்சபூதங்களின் குழந்தை நான்,
பின்னே கடல்
முன்னே மணல்
நடுவே என் பயணம்,
இல்லா சுவடுகள் தேடி

மீண்டும் பிறந்து வந்தேன்
கரையில் கறைய, என்
தேடல் இன்னும் தொடர...

கருத்துகள் இல்லை: