திங்கள், மே 09, 2011

நிழற்படம்


உன் அசைவுகள் கைதாகி நிற்க
உன் எண்ணங்கள் சிறைபட்டு கிடக்க
உன் நிகழ்வுகள் உறைந்து போக
உன்
நிழல்கூட மறைந்து ஓட
உன் விழி சொல்லும் கதைகள் இமைகளில் தேங்க
உன் இதழ் தவழும் புன்னகையும் முடிவிலியில் சேர

இவையனைத்தும் ஒருங்கே, இதோ நான் இரசிக்க
வெட்கி நெகிழ்கிறது காற்றில், அதோ உன் நிழற்படம்

கருத்துகள் இல்லை: