skip to main |
skip to sidebar
உன் அசைவுகள் கைதாகி நிற்க
உன் எண்ணங்கள் சிறைபட்டு கிடக்க
உன் நிகழ்வுகள் உறைந்து போக
உன் நிழல்கூட மறைந்து ஓட
உன் விழி சொல்லும் கதைகள் இமைகளில் தேங்க
உன் இதழ் தவழும் புன்னகையும் முடிவிலியில் சேர
இவையனைத்தும் ஒருங்கே, இதோ நான் இரசிக்க
வெட்கி நெகிழ்கிறது காற்றில்,
அதோ உன் நிழற்படம்
கவிதைகளில் இது அரிது,கனவுகளில் இது புதிது,நினைவுகளில் இது இனிது,நிகழ்வுகளில் இது அழகு,வரிகளில் இது கடிது,உணர்வுகளில் இது மிருது,பதிவுகளில் இது வடிவு,கற்பனைகளில் இது பெரிது,மெய்களில் இது வலிது...
இறந்துபோன காலம் அது எனது,கடந்துபோகும் காலம் இது உனது,இனிவரும் காலம்... அது நமது!