முடிவற்ற கரைதனில்
மீய்ந்துகிடக்கும் அலைகளை
அள்ளி பருகுகிறேன்
தீர்வதாயில்லை தாகம்
கவிதைகள் சேகரித்த
காகிதங்கள் எரித்து
அனல் சேர்க்கிறேன்
காய்வதாயில்லை குளிர்
அரிமாவாய் வென்ற
இரைதனை காகமாய்
கொத்தி உன்கிறேன்
அடங்குவதாயில்லை பசி
ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!
5 கருத்துகள்:
கவிதையும் படமும் வெகு அழகு அண்ணா :)))
Superb Sathish:)))
Pls do write often.....
// ஆழிப்பேரலைகள் சுமக்கும்
சூராவளி காற்றாய்
பலம்கொண்டு ஈர்க்கிறேன்
உதிர்வதாயில்லை இந்த சிற்றிலை!//
ரசிக்கும்படியான வரிகள் தல
nalla irruku :)
but dont ask me to explain what i understood from this :))))
Super Satish...
Dinesh D
கருத்துரையிடுக