வெள்ளி, மார்ச் 06, 2009

கனவுகள்

இமைகள் வழியே
வழிந்து நிற்கும் க‌ன‌வுகளை
தலை‌ய‌னை வழியே
ஒழுகவிட்டு விழிக்கிறேன்

ச‌ன்னல் திறைவிலக்கி
கதிரவனின் ஒளிகொண்டு
அறையில் நிரம்பியிருக்கும்
இருள் துடைத்தெடுக்கிறேன்

ஆதவனின் கரம்பட்டு
மலரும் பூக்கள்
வாடையற்றுகிடக்கும் காற்றை
மணம்வீசும் தென்றலாய் மாற்ற‌
புன்னகைக்கிறேன்

இமைக்கும் பொழுதில்
நிகழ்ந்து போகும் நிகழ்வுகள்
வெற்றிரவுகளில் இமைகளுக்குள்
வந்து வழிந்து நிற்கின்றன‌

சில நினைவுகள் இப்படித்தான்
சில நிகழ்வுகள் இப்படித்தான்
சில கனவுகள் இப்படித்தான்
இமைதட்டும் சிறுநொடிக்குள்
இதழ்மலர்ந்து மறைகின்றன‌...

5 கருத்துகள்:

KARTHIK சொன்னது…

என்ன கவிஞரே ரொம்ப நாளா ஆளக்கானாம்.
என்ன ஆச்சு ரொம்ப பிஸியா.

Unknown சொன்னது…

வழக்கம் போல கவிதை மிக நன்று அண்ணா :)))

//ஆதவனின் கறம்பட்டு//

ஆதவனின் கரம்பட்டு??

Divya சொன்னது…

நீண்ட நாட்களுக்கு பின்.......ஒரு கவிதை:))

கவிதை மிகவும் அருமை சதீஷ்!

வாழ்த்துக்கள்!!

தினேஷ் சொன்னது…

Very nice...

Dinesh D

பெயரில்லா சொன்னது…

very very nice :D