வடிவமைத்த எழுத்துக்கள்
கோர்த்தமைத்த வார்த்தைகள்
சேர்ந்தமைத்த வரிகள்
நிரம்பமைந்த கவிதை
சுமந்த வெள்ளைத்தாள்
தாங்கிய தென்றலில்
படரும் சுகந்தத்தை
உரிமைகொண்டாடும் மலர்கள்
ஏந்திய முன்பனிகளை
செங்கதிரால் மெல்ல உருக்கும்
அதிகாலை ஆதவனின்
அழகிய உதயம் கண்டு
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...
7 கருத்துகள்:
எனக்கும் இப்படி தொலைய ஆசை தான்... நினைவுகள் இல்லா இதயம் வேண்டும்... சில சமயங்களில் இன்பம்... பல சமயங்களில் துன்பமே அதிகம் இந்த நினைவுகளால்.. :(((
மறந்துவிட்டிருந்தது நிகழ்வுகளை மட்டுமல்ல
நிறைந்திருக்கும் நினைவுகளையும்தான்...///
நெஞ்சம் மறப்பதில்லை
தேவா
அழகான கவிதை. பிரித்து எழுதாமல் ஒரே மூச்சில் கோர்த்திருப்பது .. Nice.
நினைவுகளை மறப்பது .... சுகம் தான்.. சில நேரங்களில்.. சில நினைவுகளை..
நினைவென்னும் சிறைச்சாலையில் பல நேரம் கைதியாகி போவெதென்னவோ உண்மைதான்:))
கவிதை அருமை சதீஷ், வாழ்த்துக்கள்!!
மிக அழகாக வடிவமைத்து கோர்த்தமைத்திருக்கும் கவிதை சுமந்த உணர்வுகள் அருமை சதீஷ்.. :))
comment'ia elaarukum Nanrikal!!
Super Satish...
Dinesh D
கருத்துரையிடுக