புதன், நவம்பர் 12, 2008

எதிர்பார்த்தல்

வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்

கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர‌
மணல் கூட்டில்
நித்திரை பயில்கிறேன்

நிறமிழந்து வண்ணம்கொண்ட‌
சருகுகள் சாலையோரமாய்
வரவுகளேற்க,
நொறுங்கும் ஒலிகளில்
வ‌லிக‌ள் தொலைக்கிறேன்

இறகினும்மெல்லிய தாள்
சுமந்துவந்த கவிதையில்
மனதின் அறைகள் கனக்க‌,
உறையும் நொடிகளில்
உருகுபனியாகிறேன்

இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!

17 கருத்துகள்:

ஜியா சொன்னது…

ஒவ்வொரு வார்த்தையும் புரியுது... ஆனா மொத்தமா புரிய மாட்டேங்குது... :(((

வார்த்தைத் தேர்வு நன்று :))

பெயரில்லா சொன்னது…

தமிழில் pHD வைச்சு இருந்தாலும் இந்த கவிஜ புரியாது போல இருக்கே

Unknown சொன்னது…

யார் அண்ணா உங்கள பிரிஞ்சு போறேன்னு சொன்னா?? :(( ரொம்ப நாள் கழிச்சு வரீங்க... சூப்பர் கவிதை.. :)) எங்க போனீங்க??

KARTHIK சொன்னது…

என்னாச்சு கவிஞ்ஞரே.
ஏன் இவ்வலவு பெரிய இடைவெளி.

// இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!//

வார்த்தைத் தேர்வு நன்று :))

ஆமப்பா என்ன சொல்லவரைனே தெரியல

Divya சொன்னது…

நீண்ட இடைவெளிக்கு பின்.....கவிதை மலர்ந்திருக்கிறது:))

புதுசு புதுசா தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு எங்கிருந்து சதீஷ் கிடைக்குது???

அருமை, வாழ்த்துக்கள்!!

காண்டீபன் சொன்னது…

//வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்//

இதற்கு பொருள் புரிந்தது.. ஆனால் கரு புரியவில்லை.

பூக்கள் புலர்ந்து இருப்பதில்லை. மலர்ந்து இருக்கும். உவமை இடிக்குதோ?

கவிதை அருமை.

Venkata Ramanan S சொன்னது…

கடைசி வரிகள் அழகு :)

விஜயன் சொன்னது…

"கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர‌"
konjam koorvaiya erukka mathiri thaan erukku enakku.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஜி said...
ஒவ்வொரு வார்த்தையும் புரியுது... ஆனா மொத்தமா புரிய மாட்டேங்குது... :(((

வார்த்தைத் தேர்வு நன்று :))
//

புரியதவைகள்தானே எழுதவே தூண்டுகின்றன! பின்னூட்டமிட்டமைக்கு மிக்க நன்றி தோழா :)

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Anonymous said...
தமிழில் pHD வைச்சு இருந்தாலும் இந்த கவிஜ புரியாது போல இருக்கே
//

மன்னிக்கவும் அனானி :) மிக்க நன்றி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ஸ்ரீமதி said...
யார் அண்ணா உங்கள பிரிஞ்சு போறேன்னு சொன்னா?? :(( ரொம்ப நாள் கழிச்சு வரீங்க... சூப்பர் கவிதை.. :)) எங்க போனீங்க??
//

அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ஸிஸ்டர் :) இங்கதான் இருக்கேன் இப்பயெல்லாம் கற்பனை கொஞ்சம் வத்திப்போச்சு :))

நன்றி ஸ்ரீமதி!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//கார்த்திக் said...
என்னாச்சு கவிஞ்ஞரே.
ஏன் இவ்வலவு பெரிய இடைவெளி.

// இன்று பிரியும்தினம் கேட்கபடுகிறேன்,
நான் இறக்கும்தினமறியேன்
வேண்டுமெனில் துறக்கும்தினம்
குறித்துவைக்கிறேன் கேள்!//

வார்த்தைத் தேர்வு நன்று :))

ஆமப்பா என்ன சொல்லவரைனே தெரியல
//

கனவுகளை இழக்கும் கட்டாயத்தில் எதிர்பார்புகளை துறக்கும் வலுவின்றி வேறுவழியுமின்றி கலங்கும் ஒருவனின் மனநிலையை எழுதுவதாய் கிறுக்கியதன் விளைவுதான் இது :) மன்னிக்கவும்.

நன்றி கார்த்திக்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Divya said...
நீண்ட இடைவெளிக்கு பின்.....கவிதை மலர்ந்திருக்கிறது:))

புதுசு புதுசா தமிழ் வார்த்தைகள் உங்களுக்கு எங்கிருந்து சதீஷ் கிடைக்குது???

அருமை, வாழ்த்துக்கள்!!
//
அன்பர்களின் பதிவுகளிலிருந்து சுடுவதுதான் :)

மிக்க நன்றி திவ்யா!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//காண்டீபன் said...
//வண்டுகளற்ற கானகத்தில்
மலரும் பூவாய்,
விடியல் கடந்த
முன்தினமொன்றில்
புலர்ந்து கிடக்கிறேன்//

இதற்கு பொருள் புரிந்தது.. ஆனால் கரு புரியவில்லை.

பூக்கள் புலர்ந்து இருப்பதில்லை. மலர்ந்து இருக்கும். உவமை இடிக்குதோ?

கவிதை அருமை.
//

புலர்ந்திருப்பதாகவே கூறியுள்ளேன்.
மலர்ந்தால் புலர்ந்துதானே ஆக வேண்டும் :)

எதிர்பார்ப்புகள் சுமந்து மலரும் பூவொன்று அதன் கனவுகளினின்று பறிக்கப்பட்டு வாடவிடப்படுகிறதென்று வைத்துக்கொள்ளலாமா :)

மிக்க நன்றி காண்டீபன்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//ரமணன்... said...
கடைசி வரிகள் அழகு :)
//

அடடா அப்ப மொதவரிகள் நல்லா இல்லையா :)

இரசித்தமைக்கு மிக்க நன்றி இரமணன்!

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish சொன்னது…

//Vijayan said...
"கரைதனில் முகம்புதைக்கும்
அலைகளின் நுரைகளாய்,
துடிப்புகள் அதிர‌"
konjam koorvaiya erukka mathiri thaan erukku enakku.
//

உங்களுக்கு எப்படி படுதோ அப்படியே வச்சிக்கலாம் :) பிடித்திருந்தால் மகிழ்வேன் :))

இரசித்தமைக்கு மிக்க நன்றி விஜயன்!

pattampuchi சொன்னது…

oru akantha veliel evanooruvan ethai ninaithup patukiran, ivanathu idaivitha mudivai nokkiya payanangalin salai maraithuvaithirukkum rakasiyamthan enna.unngal varthaikalil ulla ekkam,thanimai,verumai,thavippu ellam super.....