என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர
என்ன இல்லை இங்கே
என் எண்ணம் தவிர
என்ன இல்லை இங்கே
என் அன்னைத் தவிர
என்ன இல்லை இங்கே
அந்த அன்பைத் தவிர
அந்த அன்பைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த கனவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நினைவைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
அந்த நொடியைத் தவிர
'
என்ன இல்லை இங்கே
என் கவிதைத் தவிர
என் கவிதைத் தவிர
என்ன இல்லை இங்கே
இந்த தனிமைத் தவிர
யாதுமாகி நீக்கமற
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னைத் தவிர?
('லுக்காசுப்பி (கண்ணாமூச்சி)' எனும் 'இரங் தே பஸந்தி' பாடலின் பாதிப்பில் கிறுக்கியது. முக்கியமாக அதில் வரும் 'இங்கே அனைத்தும் இருக்கின்றன இருந்தும் தாயே உணருகின்றேன் நீயின்றி தனிமையாய்' என்ற வரிகள், சொல்லத்தேவையில்லை இரஹ்மானின் இசையில்!)
18 கருத்துகள்:
சதிஷ்,
உங்கள் பதிவில் நல்ல கவிதை இருக்கிறது...
தினேஷ்
:)))
கவிதை அருமை மாப்பி.... Home Sick???
அண்ணா கவிதை ரொம்ப சூப்பர்..!! :))
//Home Sick???//
உங்களுக்குமா அண்ணா?? :( Same blood..!! :'(
// யாதுமாகி நீக்கமர
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னை தவிர? //
அருமை
// Home Sick??? //
எல்லாமே இருக்கு ஆனால் இல்லை.இருக்குறது இல்லாத மாதிரி இருக்கலாம்.இல்லாதது இருப்பது மாதிரி இருக்கலாம்.ஆனால் இருக்குறது இல்லாத மாதிரி இருந்தாலும் அது இல்லைன்னு ஆகாது.அது போல இல்லாதது இருக்குறது போல இருந்தாலும் அது இருக்குன்னு அர்த்தம் ஆகாது.
இதுதான் உங்க கவிதை படிச்ச effect..
very nice poem, throughly enjoyed reading it..:)
kavithai romba nallaruku Sathish:-)
நல்லாருக்கு நண்பா. ரொம்ப நாளைக்கப்பறம் இப்போதான் உங்க வலைப்பூவுக்கு வரேன். எல்லாக்கவிதைகளும் அருமை
'இருக்கு ஆனா இல்லை" என்கிற உயரிய தத்துவத்தை எடுத்துரைத்த கவுஜர் சதீஸ் வால்க வால்க!!
சீக்கிரம் வூட்டுக்கு வந்து சேரு பா...
//தினேஷ் said...
சதிஷ்,
உங்கள் பதிவில் நல்ல கவிதை இருக்கிறது...
தினேஷ்
//
நன்றி தினேஷ் :)
//ஜி said...
:)))
கவிதை அருமை மாப்பி.... Home Sick???
//
அதெல்லாம் பெருசா ஒன்னுமில்ல நண்பா :) சும்மா ஒரு எழுத்து முயற்சி அவ்வளவுதான். நன்றி ஜி!
//ஸ்ரீமதி said...
அண்ணா கவிதை ரொம்ப சூப்பர்..!! :))
//Home Sick???//
உங்களுக்குமா அண்ணா?? :( Same blood..!! :'(
//
அடடா!!
நன்றி தங்கச்சி :)
//கார்த்திக் said...
// யாதுமாகி நீக்கமர
ஏதுமற்று நிறைந்திருக்குமிந்த
நிகழ்வென்னும் முடிவிலியின்
வியாபித்தலால் இயலே சொல்
என்ன இல்லை இங்கே
என் என்னை தவிர? //
அருமை
// Home Sick??? //
//
:) நன்றி கார்த்திக்!
//துர்கா said...
எல்லாமே இருக்கு ஆனால் இல்லை.இருக்குறது இல்லாத மாதிரி இருக்கலாம்.இல்லாதது இருப்பது மாதிரி இருக்கலாம்.ஆனால் இருக்குறது இல்லாத மாதிரி இருந்தாலும் அது இல்லைன்னு ஆகாது.அது போல இல்லாதது இருக்குறது போல இருந்தாலும் அது இருக்குன்னு அர்த்தம் ஆகாது.
இதுதான் உங்க கவிதை படிச்ச effect..
//
இதுக்குதான் படிக்காதீங்கன்னு அப்பவே சொன்னேன் :)
நன்றி துர்கா
//Thena said...
very nice poem, throughly enjoyed reading it..:)
//
Thanks for the comments Thena :)
//Divya said...
kavithai romba nallaruku Sathish:-)
//
Thanks Divya!
//சகாராதென்றல் said...
நல்லாருக்கு நண்பா. ரொம்ப நாளைக்கப்பறம் இப்போதான் உங்க வலைப்பூவுக்கு வரேன். எல்லாக்கவிதைகளும் அருமை
//
தங்களின் வருகைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்களுக்கும்தான்!
நன்றி சகாரா :)
// CVR said...
'இருக்கு ஆனா இல்லை" என்கிற உயரிய தத்துவத்தை எடுத்துரைத்த கவுஜர் சதீஸ் வால்க வால்க!!
சீக்கிரம் வூட்டுக்கு வந்து சேரு பா...
//
அட அதுக்குள்ள கூப்டா எப்டி! இன்னும் சுத்திபாக்க எவ்ளோ இருக்கு :))
நன்றி CVR அண்ணாச்சி!
கருத்துரையிடுக